சிங்கப்பூரில் மூன்று இந்தியர்கள் எம்.பி.க்களாக நியமனம்
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் நியமன எம்.பி.க்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய ஒரு உலகியல் சர்வேயின் படி உலகின் என்பது சதவீத நாடுகள் இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளனர். இந்தியாவின் மதிப்பு உலக அளவில் அதிகரிக்க பிரதமர் மோடியும், பா.ஜ கட்சியின் மத்திய ஆட்சியுமே முக்கிய காரணம் என்பதை அத்தனை பேரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அமெரிக்காவின் துணை ஜனாதிபதி முதல், பிரிட்டன் பிரதமர் வரை உலகில் பல நாடுகளில் இந்திய வம்சா வழியினர் அரசியல், ஆட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
பல நாடுகள் இந்தியர் என்பதற்காகவே பதவிகளையும், வேலை வாய்ப்புகளையும் அள்ளித்தருகின்றன. இந்த வாய்ப்பி னை உலக அளவில் இந்தியர்கள் மிகவும் சிறப்பாக பயன்படுத்தி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்துள்ளனர். நம் பக்கத்து நாடான சிங்கப்பூர் தற்போது மூன்று இந்தியர்களை தமது நாட்டிற்கு எம்.பி.,க்களாக நியமனம் செய்துள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 9 நியமன எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்காக 30 பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களில் 9 பேரை முன்னாள் அவைத் தலைவர் தான் சுவான் ஜின் தலைமையிலான சிறப்பு தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 நியமன எம்.பி.க்களில் 3 பேர் இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர்களாவர். சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் நிமில் ரஜினிகாந்த் பரேக், ப்ளூரல் ஆர்ட் பத்திரிகையின் இணை நிறுவனர் சந்திரதாஸ் உஷா ராணி, வழக்குரைஞர் ராஜ் ஜோஷுவா தாமஸ் ஆகியோரே அந்த மூவர்.
நியமன எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரையும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப், வரும் 24ஆம் தேதி நியமனம் செய்வார். அவர்கள் அனைவரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் கூடும்போது பதவியேற்பார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu