மாணவர்களுக்கு தாறுமாறாக முடிவெட்டிய ஆசிரியை சஸ்பெண்ட்..! எது சரி..?
ஆமை ஓடுபோல முடிவெட்டி ஆசிரியை.
தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், கல்லூர் அடுத்த பெரம வஞ்சாவில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சிரிஷா என்பவர் ஆங்கில ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டு வர வேண்டும் என மாணவர்களிடம் பலமுறை வலியுறுத்தினார். ஆனாலும் மாணவர்கள் ஆசிரியை கூறும் அறிவுரையை ஏற்காமல் புள்ளிங்கோ கட்டிங் நீண்ட தலைமுடியுடன் பள்ளிக்கு வந்தனர்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சிரிஷா கத்திரிக்கோலை எடுத்து வந்து 10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார். உணவு இடைவேளையில் வீட்டிற்குச் சென்ற மாணவர்களின் தலையைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு தலைமுடி வெட்டிய ஆசிரியை சிரிஷாவை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
ஆனால், இதில் இன்னொரு கேள்வியை நாம் முன்வைக்கலாம். தங்களது பிள்ளைகள் இப்படி தாறுமாறாக படிக்கும் வயதில் முடியை வளர்ப்பதற்கு பெற்றோர் கண்டித்து இருக்கலாமே. பெற்றோர் செய்யவேண்டிய வேலையைத்தான் அந்த ஆசிரியை செய்துள்ளார்? அதுவும் முடியை வெட்டிவாருங்கள் என்று அனைவருக்கும் கூறியுள்ளார். ஆனால் மாணவர்கள் ஒழுக்கம் மறந்து பள்ளிக்கு தாறுமாறாக முடியை வைத்துக்கொண்டு வந்தால் அந்த மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?
பண்பில்லாத கல்வி இருந்து என்ன பயன்? ஆசிரியைக்கு ஒன்றும் நஷ்டமில்லை. அவர் இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்படுவார். ஆனால் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று சிந்தித்துப்பாருங்கள். ஆசிரியை செய்தது தவறில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu