காதல் கசக்குதய்யா...வர..வர... காதல் கசக்குதய்யா...!

காதல் கசக்குதய்யா...வர..வர... காதல் கசக்குதய்யா...!
X
பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில் தான் நடக்கின்றன என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

இன்று போலீஸ் துறையுடன் தொடர்பில் இருப்பவர்கள், சட்டத்துறையுடன் தொடர்பில் இருப்பவர்கள், பொதுப்பணியில் இருப்பவர்கள் என அத்தனை பேருக்கும் தெரிந்த விஷயம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காதல் திருமணங்கள். அதுவும் பிளஸ் 2 தேர்வு முடியும் நாள் என்று போலீசார் நாடு முழுவதும் ஏதோ அவசர நிலை பிரகடனம் செய்தத போல் மிகவும் அலர்ட்டாக இருப்பார்கள். காரணம் பிளஸ் 2 முடித்த கையோடு, கடைசி தேர்வு எழுதி முடித்ததும் தனது காதல் ஜோடியுடன் எஸ்கேப் ஆவது இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது.

மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் மாதம் குறைந்தது 10 ஜோடிகளாவது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் முடித்து விட்டு வந்து தஞ்சம் அடைவார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி., அலுவலகத்தில், மாநகர போலீஸ் அலுவலகத்தில் இது போன்ற காட்சிகளை அடிக்கடி காண முடியும். தமிழகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் இந்த நிலை தான் காணப்படுகிறது.

இப்படி திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். ஏதோ அவசரத்தில் திருமணம் முடித்து விட்டு, வேலை, குடும்பம், குழந்தைகள் என அடுத்தடுத்த சுமைகள் வரும் போது, திணற தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் ஆணோ, பெண்ணோ பிரச்னையை கிளப்பி பிரிந்து விடுகின்றனர். இதுவரை காதல் திருமணத்தின் அபாயம் பற்றி போலீசாரும், சட்டத்துறையினரும் மட்டுமே பேசி வந்தனர். இப்போது நாட்டின் உச்சநீதிமன்றமும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தொடர்பான வழக்கு, சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காதல் திருமணத்தில் எழுந்த விவகாரம் என்பது தெரிய வந்தவுடன், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் இருந்துதான் விவாகரத்தும் அதிகரிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், கணவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, சமீபத்தில் நீதிமன்றம் உடனடி விவாகரத்து வழங்கலாம், ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு கணவரின் சம்மதத்தின் பேரில் விவகாரத்து வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!