வாரணாசி கிரிக்கெட் மைதானம்.. என்ன ஸ்பெஷல் ?
பைல் படம்
ரூ.450 கோடியில் 3 ஆண்டுகளில் மைதானத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சிவனின் அம்சங்களுடன் புதிய கிரிக்கெட் மைதானம் உருவாவதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிய கிரிக்கெட் மைதானத்தின் 'தீம்' கடவுள் சிவன். மைதானத்தை மேல் இருந்து பார்த்தால், சிவனின் தலையில் உள்ள 'மூன்றாம் பிறை' போல இருக்கும். நுழைவு வாயிலின் முன் பகுதியில் அமைய உள்ள 'மீடியா சென்டர்', சிவனின் உடுக்கை போல வடிவமைக்கப்பட உள்ளது. மின்னொளி கோபுரங்கள், சிவன் கையில் உள்ள திரிசூல வடிவில் அமைகிறது. மைதான இருக்கைகளை கங்கை நதிக்கரை படிக்கட்டுகளை போல கட்ட உள்ளனர்.
கலாச்சார பிரதிபலிப்புடன் கட்டப்பட உள்ள இந்த மைதானத்தில், 7 ஆடுகளங்கள், பயிற்சி மையம், ஓய்வறைகள், வர்ணனையாளர் 'பாக்ஸ்' இருக்கும்.30,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்கலாம். வாரணாசி மைதானம் ரூ. 450 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.
கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு வாரணாசியில் ரூ.450 கோடியில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில் தேவ், கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu