பிரிந்த இந்திய தம்பதியின் மறு சந்திப்பு பயணம் விமான விபத்தில் முடிந்த சோகம்
நேபாள் விமான விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் விமானம்.
அசோக் குமார் திரிபாதி மற்றும் மும்பை, தானேவைச் சேர்ந்த அவரது பிரிந்து வாழும் மனைவி வைபவி ஆகியோர் குழந்தைகளுக்காக சுற்றுலா செல்ல அவர்களது குழந்தைகளுடன் நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதால் சோகமான முடிவாகிப்போனது.
அசோக் திரிபாதி (54) ஒடிசாவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது மனைவி வைபவி பந்தேகர் திரிபாதி (51) மும்பையில் உள்ள பிகேசி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றவர்கள். தானே நகரின் பல்கம் பகுதியில் உள்ள ருஸ்தோம்ஜி அதீனா அடுக்குமாடி குடியிருப்பில் வைபவி, அவரது மகன் தனுஷ் (22), மகள் ரித்திகா (15) ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்ல முடிவு எடுத்தனர். அதைத் தொடர்ந்து, சுற்றுலா நகரமான ஜோம்சம் நகருக்கு நேபாளத்தின் பொக்காராவிலிருந்து தாரா ஏர் என்ற விமானம் 22 பயணிகளுடன் புறப்பட்டது. அதில் அஷோக் திரிபாதி குடும்பமும் புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விமானம் விபத்துக்குள்ளானது.
வைபவியின் 80 வயதான தாய் மட்டுமே அவர்களுடன் வசித்து வந்தார். அவர் உடல் நலம் குன்றியிருப்பதாலும், தற்போது ஆக்ஸிஜன் கொடுப்பதால் மட்டுமே அவர் மூச்சுவிட முடிகிறது. அதனால் தாயை, வைபவியின் சகோதரியின் மேற்பார்வையில் விட்டுவிட்டு குழந்தைகள் மற்றும் பிரிந்த கணவன் ஆகியோரோடு சுற்றுலா சென்றனர்.
டர்போபிராப் ட்வின் ஓட்டர் 9என்-ஏஇடி விமானத்தில் மூன்று பேர் கொண்ட நேபாளி குழுவினர் தவிர, நான்கு இந்தியர்கள், இரண்டு ஜெர்மானியர்கள் மற்றும் 13 நேபாள பயணிகள் இருந்தனர். சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இமயமலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த சுற்றுலா நிறைவேறி இருந்தால் ஒருவேளை கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சேர்ந்திருக்கலாம். ஆனால், காலம் அவர்களின் வாழ்க்கையை பாதியில் முடித்து வைத்துவிட்டதே!!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu