குழந்தைகளுக்கு அன்பை கற்றுக்கொடுப்பதன் அவசியம்!
ரேமண்ட்ஸ் அதிபர் விஜய்சிங்கானியா தனது மனைவியுடன்.
ஒரு காலத்தில் அம்பானியுடன் போட்டியிட்டு தொழில் செய்தவர். இவருக்கு இரு மகன்கள். மூத்தமகன் பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து "நீங்க யாரும் வேண்டாம்" என சொல்லி விட்டு சிங்கப்பூருக்கு போய் செட்டில் ஆகிவிட்டார்.
2015ல் இளையமகன் கவுதம் சிங்கானியா பெயரில் கம்பனியை மாற்றி நிர்வாக இயக்குனர் ஆக்கினார் விஜய் சிங்கானியா. எல்லா சொத்துக்களையும் மகன் கவுதம் சிங்கானியா பெயரில் மாற்றி எழுதினார். அப்பாவின் ஒரே எதிர்பார்ப்பு மகன் வசிக்கும் "ஜேகே இல்லத்தில் தானும் தங்கலாம்" என்பதாக இருந்தது.
ஜேகே ஹவுஸ் இந்தியாவின் மிக விலை உயர்ந்த இரண்டாவது வீடு. அம்பானி வீட்டுக்கு அடுத்த படியான விலைமதிப்பு கொண்டது. அதில் விஜய் சிங்கானியா கேட்டது ஒரு அறை. அதை கொடுக்க மகன் மறுத்து விட்டார். அதன்பின் அப்பா மகனை திட்ட, கம்பனியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அப்பா விலக்கப்பட்டு விரட்டி அடிக்கபட்டார்.
இப்போது தன் 85வது வயதில் மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார் விஜய் சிங்கானியா 'செலவுகளை சந்திக்க பணம் போதவில்லை. வறுமையில் இருக்கிறேன்" என்கிறார். பிசினஸ் பிஸ்தாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மனித பண்புகளையும், உறவையும் மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். சும்மா பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது. இல்லையெனில் அது நமக்கே வினையாக வந்து முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu