சீன, பாக்., எல்லைகளில் குவிக்கப்படும் இந்திய ராணுவம்!
காஷ்மீரில் பாராளுமன்ற தேர்தலில் பெருமளவு ஓட்டுப்பதிவு, அமைதியாக நடந்தது. அமைதி திரும்பி டூரிஸம் வழியாக மக்கள் வருமானம் ஈட்ட, கிட்டத்தட்ட நார்மல்சி திரும்பியது.
மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றபோது காஷ்மீரில் மீண்டும் திடீரென தாக்குதல் பெருமளவில் தொடங்கியது. பொதுவாக தாக்கிவிட்டு தப்பியோடுவது அல்லது தற்கொலைப்படை என்றளவில் முன்பு இருந்தது. இப்போது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தீவிரவாதிகள் மக்கள் மீது மட்டுமல்ல, ராணுவ வாகனங்கள் மீதும் தாக்கினர்.
அவர்கள் பெருமளவில் நுண்ணிய தொலை தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். தீவிரவாதிகளின் கோ-ஆர்டினேஷன், அவர்கள் பயன்படுத்தும் நவீன கருவிகள், கவச உடையை துளைக்கும் துப்பாக்கி குண்டுகள், அமெரிக்க துப்பாக்கிகள், நவீன யுக்திகள் என எல்லாமே மாறியிருக்கிறது.
அதன் பின்னணியை ஆராய்ந்த இந்திய உளவுத்துறை பாக்கிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 600 SSG (Special Service Group)யினர் கார்கிலில் ஊடுறுவியது போல, தற்போது காஷ்மீருக்குள் ஊடுவியிருக்கின்றனர் என தெரிவித்தனர். அவர்கள் எப்படி ஊடுறுவினார்கள் என்பது தெரியவில்லை.
அதன் பின்னணியை ஆராய்ந்த போது, சர்வதேச எல்லையில் ஃபென்ஸிங் உள்ள இடங்களில் இஸ்ரேலில் புகுந்தது போல உள் நுழைந்து உள்ளார்கள். அவர்களுக்கு சீன ராணுவத்தின் ஸ்பான்சர்ஷிப் இருந்தது. அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள். அதனால் அவர்களின் தாக்குதல் துல்லியமாகவும், பலமாகவும் இருந்தது என தெரியவந்தது.
அதற்கு காரணம் பாக் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தை சீன எல்லைக்கு அனுப்பிய போது, அங்கே சமாளிக்க முடியாத சீனா, இந்தியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி அவர்களை ஊடுறுவ செய்துள்ளது. இந்திய- சீன எல்லையில், சீன ராணுவ வீரர்கள் கடும் குளிர் பகுதியான இமயமலையில் பணிபுரிய தயங்குவதால் இருக்கிற ராணுவத்தையே சீனாவால் கொண்டு செலுத்த முடியவில்லை. எனவே அதற்கு பதிலாக இந்திய ராணுவம் சீன எல்லையில் குவிப்பதை தடுப்பதற்கு இப்படி ஒரு ஊடுறுவலை சீனா செய்துள்ளது.
பாக்கிஸ்தான் மற்றும் சீனாவின் உண்மையான நோக்கம் காஷ்மீரில் அமைதி திரும்பவில்லை என்பதை பரப்பி, டூரிஸத்தை முடக்குவது. இந்திய ராணுவத்தை சீன எல்லைக்கு கொண்டு செல்வதை தவிர்ப்பது. அதன் மூலம் மீண்டும் வேலை வாய்ப்பு இல்லாததால் இது தீவிரவாதத்தை பரப்புவதும், PoK மக்களுக்கு, காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பவில்லை என்பதை காட்டவும் இந்த சதி திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.
ஆனால் இந்தியா அதற்கு மாறாக மேலும் சக்திவாய்ந்த கமாண்டோக்களையும், கூடுதல் ராணுவத்தையும் பெருமளவில் குவித்துள்ளது. அதன் மூலம் காடுகளில் ஒளிந்திருக்கும் பாக் ராணுவத்தை பிரித்து, நகர முடியாத அளவிற்கு அவர்களை முடக்கியுள்ளது. அதனால் அவர்கள் யாரும் காடுகளில் இருந்து வெளியேற முடியாமல், ஒவ்வொன்றாக தேடி அழிக்கப்படுவார்கள் அல்லது உணவில்லாமல் அடுத்து வருகிற குளிரில் சாவர்கள்.
ஆனால் காஷ்மீரில் புதியதாக குவிக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. அதன் நோக்கம் என்ன என்பதை இன்னும் புரிந்துகொள்ள முடியாமல் சீனாவும், பாக்கிஸ்தானும் பரிதவித்து வருகின்றன. இந்தியா அங்கு என்ன செய்யப்போகிறது என்பதை அறிய காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை..
இந்த சூழலில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தொடங்கினால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்ற சீன ராணுவம் திட்டமிட்டது. ஆனால் இந்திய ராணுவம் பெருமளவில் சீன எல்லையில் குவிப்பதால், அவர்கள் ராணுவத்தை தைவானை நோக்கி நகர்த்த முடியவில்லை. மாறாக, இந்திய ராணுவக்திற்கு இணையாக சீனாவும் தனது ராணுவத்தை குவிக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் சீன ராணுவம்.என்று சொல்லபடும் கம்யூனிஷ கைத்தடிகள் தரம் மிக மோசமானது, அவர்களால் இந்திய ராணுவத்தை சமாளிக்க முடியாத நிலையில், அவர்களை விட பல மடங்கு பலமான பாக் ராணுவத்தின் உதவி சீனாவிற்கு தேவைப்பட்டது. அது இல்லாமல் சீனாவின் திட்டமிடல்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், சீனா பாக் மூலம் இந்த ஊடுறுவலை செய்துள்ளது, மேலும் செய்யும்... ஆனால் இந்தியா பல மடங்கு வலுவான பதிலடியை கொடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்திய எல்லைகளிலும் அனல் பறக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu