சோதனையை தொடங்கியது ஜி.எஸ்.டி. துறை...!

சோதனையை தொடங்கியது ஜி.எஸ்.டி. துறை...!
X

பைல் படம்

போலிப் பதிவுகளை அடையாளம் காண ஜிஎஸ்டி துறை இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு விசிட் பிரசாரத்தைத் தொடங்குகிறது.

நாட்டின் மாதாந்திர ஜி.எஸ்.டி., வரிவசூல் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாயினை எட்டி உள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.. இதனை கண்டறிய ஜி.எஸ்.டி., துறை நாடு முழுவதும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த சோதனை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆடிட்டர்கள் தங்களது வாடிக்கையாளர்களை அலர்ட் செய்து வருகின்றனர். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய அறிவுரையில் கூறியதாவது:

அவர்கள் உங்கள் வணிக இடத்திற்கும் வரலாம். கீழ்கண்ட பொருட்களை தயாராக வைத்திருக்குமாறு ஆடிட்டர்கள் தங்களது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளனர்.

1. GST எண் கொண்ட பலகை. நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி தொழிற்சாலை/அலுவலகம்/கடைக்கு வெளியே இருக்க வேண்டும்.

2. உங்கள் வணிக இடத்தில் ஜிஎஸ்டி சான்றிதழ் இருக்க வேண்டும்.

3. நீங்கள் உங்கள் வணிகத்தை நடத்தும் அனைத்து இடங்களிலும் (அலுவலகம் / தொழிற்சாலை / கடை / குடோன் போன்றவை) அத்தகைய வளாகத்தின் முகவரியை ஜிஎஸ்டி சான்றிதழில் குறிப்பிட வேண்டும், இல்லையெனில் அபராதம் ரூ.50,000. விதிக்கப்படலாம்.

4. விற்பனை மற்றும் கொள்முதல் பில்கள் உங்கள் வசம் இருக்க வேண்டும்.

5. உங்கள் வளாகம் வாடகைக்கு விடப்பட்டால், சரியான பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

6. உங்கள் பதிவுச் சான்றிதழில் நீங்கள் வணிகம் நடத்தும் வளாகத்தைத் தவிர வேறு முகவரி இருந்தால், GST அதிகாரி உங்கள் நிறுவனத்தை போலி என அறிவிப்பார். மேலே உள்ள புள்ளிகளைச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறீர்கள், ஏதேனும் நிலுவையில் இருந்தால், தேவையானதை விரைவில் செய்யுங்கள்.

Tags

Next Story
ai in future agriculture