ஆகஸ்ட் மாதத்தில் இப்படி ஒரு நிலையை நாடு சந்தித்ததே இல்லை.. எது தெரியுமா

ஆகஸ்ட் மாதத்தில் இப்படி ஒரு நிலையை நாடு சந்தித்ததே இல்லை.. எது தெரியுமா
X

பைல் படம்

நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.

நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழை அளவில் 30 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.. இதுவரை சந்திக்காத ஒரு ஆகஸ்ட் மாதமாக இது அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் பருவமழை மற்றும் வெப்ப நாள்களை புரட்டிப் போட்டு வெகுவாக பருவ காலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது எல் நினோ. இதனால், கடந்த 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான, வறட்சியாக ஆகஸ்ட் மாதமாக நாம் கடந்து செல்லவிருக்கும் ஆகஸ்ட் மாதம் அமைந்து விட்டது.

இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய வழக்கமான மழை அளவில் 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 20 நாள்கள் தான் மழை பெய்திருக்கிறது, மற்ற நாள்களில் மழை பிரேக் எடுத்துக் கொண்டதால், ஜூன் - செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் மிகக் குறைவான மழையே பதிவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மாதம் முடிவடைய இன்றுடன் முடிவடையும் நிலையில், வழக்கமாக இந்த மாதத்தில் 241 மி.மீ. மழை பெய்ய வேண்டியது, ஆனால் 160.3 மி.மீ. மழை தான் பதிவாகியிருக்கிறது. இது 33 சதவிகிதம் குறைவாகும். இதற்கு முன்பு, 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 191.2 மி.மீ. மழை பெய்தது. இது 25 சதவீதம் குறைவு.

இதுதான் வழக்கமான அளவை விடக் குறைவாக பதிவாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் வகையில் தற்போது பருவமழை அதிக நாள்கள் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 30 சதவீதம் அளவுக்கும் மேல் மழை குறைவாகப் பெய்திருப்பது இதுவே முதல் முறை.

Tags

Next Story