அடுத்த ஜனாதிபதி ஆகிறாரா தமிழிசை? டெல்லி பத்திரிக்கையாளர் தகவல் (எக்ஸ்குளுசிவ்)

அடுத்த ஜனாதிபதி ஆகிறாரா தமிழிசை?  டெல்லி பத்திரிக்கையாளர் தகவல் (எக்ஸ்குளுசிவ்)
X

தமிழிசை சௌந்தரராஜன் 

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி பதவியை தமிழிசை அலங்கரிக்கப்போகிறார் என அரசியல் களத்தில் பரபரப்பான விவாதம் உருவாகி உள்ளது.

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி பதவியை தமிழகத்தை சேர்ந்த தமிழிசை அலங்கரிக்கப்போகிறார் என்று டெல்லி பத்திரிக்கையாளர் வெளியிட்ட தகவல் தமிழக அரசியல் களத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

தமிழிசை அறிமுகம் தேவையில்லாத ஒரு தமிழச்சி. அவர் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவராக இருந்த போது அக்கட்சியை தமிழகத்தில் வளர்க்க பட்டபாடுகளை வரலாறு நன்றாகவே பதிவு செய்தது. தமிழகத்தின் அசைக்க முடியாத இரு பெரும் சக்திகளான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு எதிராக அரசியல் நடத்தினார் தமிழிசை. அவரது பதவிக்காலத்தில் தான் தமிழகத்தில் பாரதீய ஜனதா கிராமத்தின் மூலை, முடுக்குகள், சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்தது. தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஒன்று உள்ளது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பெருமை தமிழிசையையே சேரும்.

இதற்காக அவர் உழைத்த உழைப்பு, பட்ட கஷ்டங்கள், எதிர்கொண்ட சிரமங்கள், அவமானங்கள் இந்தியாவில் வேறு எந்த ஒரு அரசியல் தலைவரும் எதிர்கொண்டிருக்கவே முடியாது. அந்த அளவு கடும் நெருக்கடியையும், தனிநபர் விமர்சனத்தையும் அனுபவித்தார். இருப்பினும் அதனைப்பற்றி துளியும் கவலையில்லாமல், எப்போதும் சிரித்த முகத்துடன் 'இல்லந்தோறும் தாமரை, உள்ளந்தோறும் மோடி' என அவர் மேற்கொண்ட பிரசார பயணம், துண்டு பிரசுரம் அச்சடித்து வீடு, வீடாக சென்று தமிழக மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தாமரை சின்னத்தையும், மோடியின் பெயரையும் படத்தையும் கொண்டு போய் சேர்த்து போன்ற நடவடிக்கைகள், அவருக்கு பா.ஜ., மேலிடத்தில் நற்பெயரை பெற்றுத்தந்தன.

அவரது பதவிக்காலத்தில் பா.ஜ., தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்பது உண்மையாக இருந்தாலும், பா.ஜ., தமிழகத்தில் வேரூன்ற செய்த பெருமை அவரை மட்டுமே சேரும். மிகவும் உயர்வான அரசியல் பாரம்பரியம் மிகுந்த குடும்பத்தில் சேர்ந்த தமிழிசை, டாக்டருக்கு படித்தவர். மிகவும் உயர்ந்த வாழ்வியல் நெறிமுறைகளை கொண்டவர். இவரது குடும்பத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய சிறப்பும், மரியாதையும், வரலாறும் உண்டு.ஆனாலும், தமிழக அரசியல் களத்தில் அவர் எதிர் கொண்ட அசிங்கமான விமர்சனங்கள், அவர் பட்ட கஷ்டங்கள், அவரது உழைப்பு, மனோபலம், தைரியம், போராட்ட குணம் ஆகியவற்றை மோடியும், அமித்ஷாவும் கவனித்துக் கொண்டே இருந்தனர். இதனால் அவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கானா கவர்னர் பதவியை துாக்கி தமிழிசைக்கு கொடுத்தனர்.

தமிழிசை கவர்னராகி விட்டாரா? என்று தமிழக அரசியல் கட்சிகள் வாயை பிளந்தன. அவரை தரக்குறைவாக விமர்சித்த அரசியல் தலைவர்கள், தலையை தொங்கபோட்டபடி ஒளிந்து கொண்டனர். தெலுங்கானா கவர்னராக அவர் பொறுப்பேற்றதும், பெண்களுக்கு எதிராக நடந்த அநீதியை அறிந்த அவர் மேற்கொண்ட நடவடிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாராட்டை பெற்றது. இந்த பதவியை அவர் சிறப்பாக செய்ததால், கூடுதல் போனசாக புதுச்சேரி கவர்னர் பதவியும் வந்து சேர்ந்தது. தற்போது இரண்டு மாநிலங்களுக்கு தமிழிசை கவர்னர். அவரது செயல்பாடுகள் அந்த பதவிக்கே பெருமை சேர்த்துள்ளன.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையாநாயுடு பெயரும் அந்த பட்டியலில் உண்டு. இந்நிலையில் பா.ஜ., மேலிடத்திற்கு மிகவும் நெருக்கமான டெல்லி பத்திரிக்கையாளர் ஆர்.ராஜகோபாலன், 'தமிழிசை அடுத்த ஜனாதிபதி ஆகப்போகிறார்' என வெளியிட்ட தகவல் தமிழகத்திலும், இந்தியாவிலும் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

வெங்கையாநாயுடுவிடம் அடுத்த ஜனாதிபதி பதவியை வழங்க பாரதீய ஜனதா மேலிடம் இன்னும் முழு மனதுடன் தயாராகவில்லை என்பது உண்மை தான். பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தமிழிசையும் உள்ளார் என்று அவர் உறுதிபட கூறியுள்ளதிலும் உண்மை உள்ளது. தமிழிசை ஜனாதிபதி பதவிக்கு மிக, மிக பொருத்தமானவர். பா.ஜ., மேலிடத்தின் முழுமையான நம்பகத்தன்மையை பெற்றவர். தவிர அவரை ஜனாதிபதி ஆக்குவதன் மூலம் தென் மாநிலங்களை சேர்ந்த பெண் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் வாக்காளர்களை கவர தமிழிசை மிகச்சிறந்த சாய்ஸ் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. குறிப்பாக தமிழிசைக்கு வழங்கப்படும் ஜனாதிபதி பதவி தமிழக பெண்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக வாக்களர்களையும் வெகுவாகவே கவரும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. பா.ஜ.,வின் இந்த நடவடிக்கை தென் மாநிலங்களில் அக்கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படி பா.ஜ.,வின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்த தகுதி வாய்ந்த ஒரு தமிழச்சி இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றால், தமிழக மக்களுக்கு அதனை விட மிகப்பெரிய மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் வேறு இல்லை என்பது மட்டும் திட்டவட்டமான உண்மை. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்வின் போது, 'யாருமே எதிர்பார்க்காத வகையில் ராம்நாத் கோவிந்தை பா.ஜ., மேலிடம் வேட்பாளராக அறிவித்தது. இப்படி ஒரு வேட்பாளரை பா.ஜ., மேலிடம் அறிவிக்கப்போகிறது என்பதை எந்த ஒரு அரசியல் நிபுணரும் கணிக்கவே இல்லை. வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என யாரும் கூறவில்லை. அந்த அளவு ரகசியமாக பா.ஜ., காய் நகர்த்தி தனது வேட்பாளரை தேர்வு செய்தது. இம்முறையும் அதுபோல் நடக்குமா? என்பது தெரியாவி்ட்டாலும், தமிழிசை பெயர் அடிபடுவதே எங்கள் மாநிலத்திற்கு கிடைத்த பெருமை என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself