உடை மீது தொட்டாலும் அது பாலியல் சீண்டல் தான்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உடை மீது தொட்டாலும் அது பாலியல் சீண்டல் தான்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
X

உச்ச நீதிமன்றம் 

ஆடைக்கு மேல் தொட்டால் அது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்ற மும்பை நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

மும்பை குழந்தைக்கு குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிழ்மை நீதிமன்றம் சதீஷ் என்கின்ற இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. இவருக்கு மூன்று வருடம் தண்டனை வழங்கப்பட்டது.

இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவரை போக்சோ சட்டத்தின் கீழ் இருந்து மட்டும் கோர்ட் விடுவித்தது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அந்த சிறுமியின் உடைய இவர் அகற்றவில்லை என்பதால் போக்சோ சட்டம் இவருக்கு பொருந்தாது என தீர்ப்பளித்தது.

சிறுமியின் உடையை குற்றம்சாட்டப்பட்டவர் கழட்டவில்லை. இதனால் இது பாலியல் குற்றமாக கருதப்படாது. எனவே இதை போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்று கூறி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் , சட்ட வல்லுனர்கள் , பலர் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது மிகப்பெரிய அளவில் தவறான முன்னுதாரணமாக முடியும் என்றும் குறிப்பிட்டனர். அதுமட்டுமின்றி அட்டார்னி ஜெனரல் கே கே வேணுகோபால் இதற்கு எதிராக தன்னுடைய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தேசிய பெண்கள் கமிஷனும் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

கடந்த ஜனவரி மாதம் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி யூ யூ, லலித் தலைமையிலான நீதிபதிகள் ரவீந்திர பாட், திரிவேதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நேற்று இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தால் அது போக்சோ சட்டத்தின்கீழ் வராது என்ற மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பியது போல சட்டம் சட்டம் இருக்கக் கூடாது. உடை மீது தொட்டாலும் அது பாலியல் சீண்டல் தான் பாலியல் ரீதியாக உடலில் எப்படி தொட்டாலும் அது பாலியல் குற்றமாகவே கருதப்படும் மீது தொட்டாலும் ஒரே நோக்கம் தான் இதில் சட்டரீதியாக மாற்றம் செய்ய முடியாது. இதனால் மும்பை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!