அதானி குழும நிலை அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு...!
பைல் படம்
அதானி குழுமத்தின் மீது பங்குச் சந்தை மோசடி, பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், அதானி குழுமத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டுமென இந்திய சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்தது.
அதானி குழுமத்தின் மீதான விசாரணையை மேற்கொள்ள செபிக்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த அவகாசம் முடிவுக்கு வந்தது. விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய செபி, இன்னும் விசாரணை முடியவில்லை என்றும், மேலும், 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் நியமித்த 6 பேர் கொண்ட நிபுணர் குழு தங்களின் விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் செபி-யின் அவகாசம் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான உத்தரவில், ‘இந்திய பங்குச்சந்தை ஆணையத்திற்கு (செபி) வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுகிறது. இதற்கிடையே புதுப்பிக்கதக்க நிலை அறிக்கையை வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் செபி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu