சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்பு

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்பு
X

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ஏ.வி.ரமணா 

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

சுப்ரீம் கோர்ட்டின் 47வது தலைமை நீதிபதியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றார். புதிய தலைமை நீதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த என்.வி. ரமணா நியமிக்கப்பட்டார். அவர் இன்று 48வது நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆந்திராவை சேர்ந்த ரமணா ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் பணியாற்றி உள்ளார். ஆந்திராவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் இருந்தார்.

2013 மார்ச் 10 முதல் மே 20 வரை ஆந்திர உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். செப்., 2013ல் டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2014 பிப்ரவரி முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்து இன்று தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26 வரை உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil