Support Local Traders-"உள்ளூர் வணிகர்களை'’ ஆதரியுங்கள்: பிரதமர் மோடி..!

Support Local Traders-உள்ளூர் வணிகர்களை’ ஆதரியுங்கள்: பிரதமர் மோடி..!
X

பிரதமர் நரேந்திர மோடி (கோப்பு படம்)

உள்ளூர் வணிகர்கள், உற்பத்தியாளர்களை ஆதரியுங்கள் என்ற பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகிறது.

பிரதமர் மோடி பல ஆண்டுகளாகவே மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களை ஊக்குவித்து வருகிறார். மான் கி பாத் நிகழ்ச்சியிலும் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குங்கள்.உள்ளூர் வணிகர்களை ஊக்கப்படுத்துங்கள் என பல முறை கூறியுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது வந்துள்ள பதிவு நமது வாசகர்களுக்கு வழங்கி உள்ளோம்.

"பொது மக்களான உங்களை நம்பியே பாரம்பரியமாக பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வரும் நம்ம ஊர் ஜவுளிக்கடைகள், உணவகங்கள், பாத்திரக்கடை, எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கு நேரில் சென்று பர்சேஸ் செய்து உள்ளூர் வணிகர்களை ஆதரியுங்கள்!"

"சாலையோர சிறு குறு வியாபாரிகளிடம் சிறு தொகைக்காவது பொருட்களை வாங்கி அவர்களுக்கு வாழ்வளியுங்கள்!"

"கோஆப்டெக்ஸ் சென்று ஒரிரு கைத்தறி ஆடைகளையாவது வாங்கி நெசவாளர்களை வாழ வையுங்கள்!" "பிரமாண்ட கடை கண்டு வியக்காமல்" "தேவையில்லாமல்" "சம்பாதித்த காசை நல்ல வழியில் செலவழிக்க நம்ம உள்ளூர் கடைகளுக்கு சென்றால் தான் இயலும்."

"அமேசான், பிலிப்கார்டில் ஆன்லைனில் விலை குறைவு என சொல்லாதீர்கள்..!" போன்பே... ஜி பே யில் ரீசார்ஜ் செய்து உள்ளூர் வியாபாரிக்கு கிடைக்கும் லாபத்தை தடை செய்யாதீர்கள். "ஒரு பொருள் வாங்க முயன்று அவர்கள் விளம்பர வலையில் வீழ்ந்து கையில் இருக்கும் பணத்துக்கு மேல் தேவையற்ற பொருட்களை வாங்கி கடனாளி ஆனவர்கள் அதிகம்."

"ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம்!" "ஆன்லைனில் நீங்கள் பொருட்கள் வாங்குவது யாரை வாழ வைக்கிறது என உணருங்கள்."

"உறவுகளை போற்றி, நலம் விசாரித்து, கைராசியோடு பொருட்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது நம்மூர் மக்களை வாழ வைக்கும்."

"வெள்ள நிவாரண நிதி, திருவிழா நன்கொடை, திருப்பணிகளுக்கு நன்கொடை, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி், இல்ல விழாக்களில் கலந்து கொண்டு வாழ்த்துவது உள்ளூர் வணிகர்கள் தானே!"

"உள்ளூர் வணிக நிறுவனங்களில் வேலை பார்ப்போர் அனைவரும் நம் உடன்பிறவா சகோதரர்கள் சகோதரிகள் அல்லவா?" "அவர்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துங்கள்..." "எனவே, அன்பார்ந்த நல் உள்ளங்களே துணிமணிகள், இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், என அனைத்து வகை பொருட்களை உள்ளூர் வணிகர்களின் கடைகளில் வாங்கி ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்." என்ற பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்