இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா.. எப்படி, எங்கே மாற்றுவது?

இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா.. எப்படி, எங்கே மாற்றுவது?
X

கோப்பு படம்


மாற்றுவதற்கு மறந்து போய் தங்களிடம் தங்கி விட்ட ரூ.2000 நோட்டுகளை எப்படி, எங்கே மாற்றுவது என்று தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்களே...

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் உங்களிடம் இருந்தால் அதை மாற்றுவதற்கு மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தில் (Madurai, Tallakulam Post office) இதற்கான விண்ணப்பம் தருகிறார்கள்.

விண்ணப்பம் வாங்கி மூன்று Xerox copy எடுத்துக் கொள்ளுங்கள். பத்து 2000₹ நோட்டுகள் வரை ஒரு விண்ணப்பத்துடன் இணைக்கலாம். விண்ணப்பத்தில் கேட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, ( மூன்று விண்ணப்பங்களும் original ஆக இருக்க வேண்டும். Xerox copy வைக்கக்கூடாது), அதனுடன் உங்கள் Aadhar card Xerox copy, PAN Card Xerox copy, உங்கள் புகைப்படம் ஒட்டிய Bank account passbook front copy (to verify Account number and IFSC code), இணைத்து தர வேண்டும்.

அவர்கள் அதை verify செய்து, திருப்பி தருவார்கள். இணைப்புகளுடன் உங்கள் 2000₹ நோட்டுகளை, *THE GENERAL MANAGER, RESERVE BANK OF INDIA, FORT GLACIS, 16 RAJAJI SALAI, CHENNAI 600001. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். Verify செய்து திருப்பி கொடுத்த இணைப்புகள் மற்றும் பணத்தை கவரில் வைத்து திரும்ப கொடுத்தால், நீங்கள் மாற்ற வேண்டிய தொகைக்கு ஏற்ப insurance செய்து, speed post அனுப்பி விடுவார்கள்.

insurance amount நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஏற்ப மாறுபடும். 15 நாட்களில் உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் மாற்ற அனுப்பிய பணம் Reserve Bank மூலம் வரவு வைக்கப்படும். இதுவரை அரசு கொடுத்த வாய்ப்புகளை இழந்தவர்கள், மீண்டும் இந்த வாய்ப்பினை பயன்படுத்துங்கள். மதுரை தல்லாகுளம் போஸ்ட் ஆபீஸ் மட்டுமல்ல... மாவட்ட தலைநகரங்களில் உள்ள மற்ற போஸ்ட் ஆபீஸ்களிலும் இந்த வசதி உள்ளதா என கேட்டுப்பாருங்கள்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்