65 வது வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்

65 வது வயதில் அடியெடுத்து   வைக்கிறது தூர்தர்ஷன்
X
இப்போதான் இந்த ஓடிடி எல்லாம் வந்துவிட்டது

65 வது வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன் நெட் ஒர்க். இப்போதான் இந்த ஓடிடி எல்லாம் வந்துவிட்டது.

ஆனால், கடந்த 64 ஆண்டுகளாக, தூர்தர்ஷன் எனப்படும் டிடிதான் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தனது கண்பார்வையில் வைத்திருந்தது.தூர்தர்ஷன் தனது 64 வயதை நிறைவு செய்து, இன்று 65வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 15 தனது 64 வயது நிறைவைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.

கடந்த 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, தூர்தர்ஷன் சோதனை முறையில், தனது ஒளிபரப்பை செய்தது. இது 1965ஆம் ஆண்டு, டிடி என்ற பெயரில் ஒளிபரப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

அப்போது தில்லியில் உள்ள வீடுகளுக்கு தொலைக்காட்சி சேவை கிடைத்தது. முதல் ஒளிபரப்பை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார்.

பிரசார் பாரதியின் கீழ் இயங்கிய தூர்தர்ஷன், அப்போது, நாட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி அலைவரிசையாக இருந்தது. படிப்படியாக மாநிலங்கள் தோறும் அலுவலகங்கள் அமைத்து, உள்ளூர் மொழிகளிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது.

இப்போது நெடுந்தொடர்களைப் போல ஞாயிறு காலையில் மகாபாரதமும், ராமாயணமும் ஒளிபரப்பாகும். அப்போது தெருக்களில் சந்தடி இருக்காது. எல்லோர் வீடுகளிலும் இந்த தொலைக்காட்சியின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

Tags

Next Story
ai in future agriculture