ஆறு மாநிலங்களுக்கு சிறப்பு நிதி : மத்திய அரசு முடிவு..!

ஆறு மாநிலங்களுக்கு சிறப்பு நிதி :  மத்திய அரசு முடிவு..!
X

கோப்பு படம் 

வளர்ச்சிக் குறியீட்டில் பின்தங்கியுள்ள 6 மாநிலங்களுக்கு சிறப்புப் பொருளாதார நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வளர்ச்சிக் குறியீட்டில் பின்தங்கியுள்ள 6 மாநிலங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்புப் பொருளாதார நிதியுதவி வழங்க பரிசீலிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிகார், ஆந்திரப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஸா மற்றும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் வருகின்ற பட்ஜெட்டில் துறை வாரியான வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார மானியங்களை பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய இரு கட்சிகளாக பீகாரை ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளமும், ஆந்திரத்தை ஆட்சி செய்யும் தெலுங்கு தேசம் கட்சியும் உள்ளன. அடுத்தாண்டு பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தி வருகிறார். அதேபோல், செவ்வாய்க்கிழமை தில்லிக்கு பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற சிறப்புப் பொருளாதார மானியம் கோரியுள்ளார்.

“நிதி அயோக் சில விதிமுறைகளை நிர்ணயித்துள்ள நிலையில், எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தற்போது சாத்தியமில்லை. ஆனால், மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பீகார், ஆந்திரம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியிலும் உறுதியாக உள்ளது. வரவிருக்கும் பட்ஜெட்டில் 5 அல்லது 6 மாநிலங்களுக்கான சிறப்பு பொருளாதார மானியம் வழங்குவது நிராகரிக்க முடியாத நிலை உள்ளது.”

பட்ஜெட் குறித்து அனைத்து மாநிலங்களிடமும் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. இதில், சில மாநிலங்கள் சிறப்பு பொருளாதார மானியத்தை கோரியுள்ளது.

தற்போதைய வழிகாட்டுதல்படி, சிறப்பு அந்தஸ்து அங்கீகரிப்பது சாத்தியமில்லை என்றாலும், கணிசமான பொருளாதார மானியங்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!