/* */

'வலையோசை கலகலவென..' பாடல் பாடகி உடல்நிலை கவலைக்கிடம்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்ததால், ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

வலையோசை கலகலவென.. பாடல் பாடகி   உடல்நிலை கவலைக்கிடம்
X

லதா மங்கேஸ்கர் 

பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் பெரும்பாலான இந்திய மொழிகளில் பாடியுள்ளார். குறிப்பாக இந்தி, தமிழ், வங்காளம், மலையாளம், தெலுங்கு,கன்னடம் என பல மொழிகளில் பாடல்களை பாடியிருப்பவர்.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதனால் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு அவரது உடல்நிலையை டாக்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டாக்டர் பிரதித் சம்தானி கூறும்போது "லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.அதனால் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.

ஜனவரி தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவருக்கு நிமோனியா இருப்பதும் கண்டறியப்பட்டது. லேசான அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் ஜனவரி 28ம் தேதி சிறிது முன்னேற்றம் கண்டார். பின்னர் அவர் வென்டிலேட்டரில் இருந்தும் எடுக்கப்பட்டார்.

தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த லதா மங்கேஸ்கர் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அதனால் அவர் ஐசியூவில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கவலைக்கிடமாக உள்ளதாகவே மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On: 5 Feb 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  2. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  4. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  5. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  7. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  10. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி