சபரிமலை மண்டல தரிசனம் ஆன்லைன் பதிவு தொடக்கம்

சபரிமலை மண்டல தரிசனம் ஆன்லைன் பதிவு தொடக்கம்
X

சபரிமலை ஐயப்பன் கோவில் - கோப்புப்படம் 

சபரிமலையில் வரும் 17ல் தொடங்க உள்ள மண்டல காலத்துக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் தரிசனம் செய்ய முன்பதிவு ஏதும் செய்ய தேவையில்லை என்ற நிலையே முன்பு இருந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசல், பக்தர்களின் சிரமங்களை குறைப்பதற்காக தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், அந்த சமயத்தில் நேரடியாக வந்து சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் வரும் 17 அதிகாலை தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை 16 மாலை திறக்கப்படும். 41 நாட்கள் பூஜை நடக்கும் இந்த கால அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

எல்லா நாட்களிலும் அதிகாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை16 ஸ்லாட்டுகள் பிரிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் தற்போது மண்டல பூஜை காலமான டிச. 25 வரை மட்டுமே ஆன்லைன் முன்பதிவு டிச.,26, 27 மற்றும் மகர விளக்கு சீசனுக்கான முன்பதிவு பின்னர் தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்னர் சபரிமலையில் தரிசனம் அனைத்தும் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுகிறது.

தங்க அங்கி வருகை தரும் டிச.,26 மற்றும் மண்டல பூஜை நடைபெறும் டிச.,27 தேதிகளுக்கும், மகர விளக்கு சீசனுக்கும் முன்பதிவு தொடங்கவில்லை. இந்த தேதிகளுக்கான முன்பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக வரும் பத்தாம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 11-ல் மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜாவின் பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடைஅடைக்கப்படும்.

ஆன்லைன் தரிசன முன்பதிவு செய்யும் முறை :

  • Sabarimalaonline.org என்ற இணையதளத்திற்கு சென்று தரிசனம் செய்வோர் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும்.
  • ஆதார் எண், மொபைல் எண் போன்ற விபரங்கள் அளிக்க வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.
  • ஒரு முறை முன்பதிவு செய்த உடன் அந்த நபருக்கான தரிசன நாள், நேரம் போன்றவை ஒதுக்கப்பட்டு விடும்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil