ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை: மோடியுடன் முக்கிய ஆலோசனை

நேற்றிரவு டெல்லியில் வந்து இறங்கிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்.
தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ள ஐரோக்கிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
எனினும், இதற்கெல்லாம் சற்றும் சளைக்காமல் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போரில் இந்தியா நடுநிலையை மேற்கொண்டுள்ளது. மேலும், போரை நிறுத்த வேண்டுமென்று ரஷ்யாவை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழலில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் டெல்லிக்கு நேற்றிரவு வந்துள்ளார். தனது 2 நாள் பயணத்தின் போது பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். அப்போது, ரஷ்யாவின் நடவடிக்கைகள், அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து, லாவ்ரோவ் பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்திய பயணம் சர்வதேச நாடுகள் உற்று நோக்குவதால், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu