ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரால் ஹரியானாவை வென்ற பாஜக..!
ஹரியானா தேர்தல் வெற்றி மகிழ்ச்சியை பிரதமர் மோடியோடு பகிர்ந்துகொள்ளும் பாஜக நிர்வாகிகள்.
இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிகைகளும் டெலிவிஷன் ஊடகங்களும் youtube ஊடகங்களும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால் நிலையோ வேறு. திடீரென்று பாஜக அதற்குத் தேவையான மெஜாரிட்டி தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக வெற்றி எப்படி நடந்தது. அங்குள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார் இயக்கங்களும் ஒரு காரணம்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள இந்துக்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பங்களாதேஷில் நடந்த இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் உலகத்தில் இஸ்ரேல் என்ற நாடு பயங்கரவாதிகளால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்று ஹரியானா மக்களிடம் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் முழு தகவல்களையும் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளால் இந்துக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு வரும் என்று இந்து மக்களிடையே ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தினர் தீவிர பிரசாரம் செய்தனர்.
இதனை ஹரியானா மக்கள் ஓரளவு புரிந்து கொண்டனர். இந்த காரணத்தால் தான் பாஜக கட்சி ஹரியானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டது. இதுதான் உண்மை. இந்திய தேசம் அதனுடைய பூர்வீக மக்களும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் இந்தியா என்ற புண்ணிய பூமியில் இந்திய பூர்வீகமாக கொண்ட மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று ஹரியானா மக்களிடையே ஆர்.எஸ்.எஸ்., உட்பட இந்து அமைப்புகள் தீவிர பிரசாரம் செய்து நம்பிக்கையை விதைத்தனர். அதனால் மக்கள் பா.ஜ.க.,விற்கு வாக்களித்துள்ளனர். பாஜக கட்சி தான் இந்திய பூர்வீக மக்களை வாழவைக்க முடியும் என்று மக்கள் நம்புகின்றனர் என பா.ஜ.க.,வினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu