இந்திய ரிசர்வ் பேங்குக்கு புதிய துணை கவர்னர் நியமனம்
இந்திய ரிசர்வ் பேங்க் துணை கவர்னர் ரபி சங்கர்.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொடர் சரிவில் இருந்து காப்பாற்றவும் போராடி வரும் இந்திய ரிசர்வ் பேங்க் புதிதாக ஒரு துணை கவர்னரை நியமனம் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் பேங்கின் தேர்வை நாடாளுமன்றத்தின் நியமன குழு ஆய்வு செய்து துணை கார்னர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் பேங்கின் 4வது துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது நியமனம் குறித்து ஆர்பிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரிசர்வ் பேங்கில் தற்போது துணை கவர்னராக இருந்த பி.பி. கனுங்கோ ஏப்ரல் 2ம் தேதி ஓய்வுபெற்ற நிலையில், இப்பதவியில் ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் மகேஷ் குமார் ஜெயின், மைக்கேல் பத்ரா, ரஜேஷ்வர் ராவ் ஆகியோரை தொடர்ந்து 4வது துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பின்டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி பொருளாதாரத்தில் ஆ.Phட பட்டம் பெற்ற ரபி சங்கர் ரிசர்வ் பேங்கில் பல முக்கியப் பதவிகளிலும், பணிகளையும் செய்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பின்டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவுகளை நிர்வாகம் செய்ய உள்ளார். ஐஎம்எஃப் குழு ரிசர்வ் பேங்கின் பல முக்கியக் குழுக்களில் இடம்பெற்று உள்ள ரபி சங்கர் 2005-11 வரையிலான காலகட்டத்தில் பங்களாதேஷ் ரிசர்வ் பேங்கின் பாண்ட் மார்கெட் மற்றும் டெபிட் மேனேஜ்மென்ட் பிராசஸ் ஆகியவற்றை உருவாக்க ஐஎம்எஃப நியமித்த குழுவில் ரபி சங்கர் மிக முக்கியமானவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu