கார் வாங்க வேண்டுமா..? உங்களுக்காக காத்திருக்கின்றன சலுகைகள் .!
ரூ.8 லட்சம் - ரூ.10 லட்சம் விலை வரம்பில் ஒரு நல்ல காரை வாங்க விரும்பினால், நீங்கள் ரெனால்ட் கார்களை பார்க்கிறீர்கள் என்றால் இந்த ஜூன் மாதம் நிறுவனத்தின் கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகளை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஜூன் மாதத்தில் க்விட், கிகர் மற்றும் ட்ரைபர் உள்ளிட்ட ரெனால்ட் கார்களை வாங்குவருக்கு கேஷ் டிஸ்கவுண்ட்ஸ் , கார்ப்பரேட் போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே நீங்கள் ஒரு புதிய ரெனால்ட் காரை வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு இந்த ஜூன் சிறந்த மாதமாக இருக்கும். எனினும் இந்த தள்ளுபடி சலுகைகள் கார் மாடல் மற்றும் டீலர் லொக்கேஷன் மற்றும் பிற காரணிகளை பொறுத்து மாறுபட கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரெனால்ட் க்விட் (Renault Kwid): இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் ஒரு பிரபலமான என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரான Renault Kwid கவர்ச்சிகரமான தள்ளுபடிகளுடன் கிடைக்கிறது. வேரியன்ட் மற்றும் VIN ஆண்டு அடிப்படையில் தள்ளுபடிகள் மாறுபடும். இந்த 2023 ஜூன் மாதம் நீங்கள் Renault Kwid-ஐ வாங்க திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு ரூ.57,000 வரை தள்ளுபடி கிடைக்க கூடும். இந்த தள்ளுபடியில் ரூ.15,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட், ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.12,000 வரை கார்ப்பரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்கும். கூடுதலாக ரூ.10,000 வரை லாயல்டி போனஸ் பெறவும் வாய்ப்பு உள்ளது.
ரெனால்ட் கிகர் (Renault Kiger): காம்பேக்ட் SUV-யான Renault Kiger-க்கும் இந்த ஜூன் மாதத்தில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒருவேளை நீங்கள் Renault Kiger காரை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த ஜூன் மாதத்தில் இந்த காரைஅதிகபட்சமாக ரூ.65,000 வரை தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.10,000 வரையிலான லாயல்டி போனஸுடன், ரூ.12,000 வரையிலான கார்ப்பரேட் பெனிஃபிட்டையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber): 7 சீட்டர் காரான Renault Triber SUV இந்த ஜூன் மாதம் ரூ.45,000 வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரூ.15,000 வரையிலான கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் பெனிஃபிட்டும் அடங்கும். தற்போதுள்ள ரெனால்ட் வாடிக்கையாளர்களும் ரூ.10,000 வரை லாயல்டி போனஸ் பெறலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu