உயிர் காக்கும் ரெம்டெசிவிருக்கு சுங்க வரி ரத்து : மத்திய அரசு அதிரடி உத்தரவு

உயிர் காக்கும் ரெம்டெசிவிருக்கு சுங்க வரி ரத்து : மத்திய அரசு அதிரடி உத்தரவு
X

ரெம்டெசிவிர் மருந்து (மாதிரி படம்) 

ரெம்டெசிவிர் மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலைவேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் தொட்டே, இந்தியாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து 2 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.உள்நாட்டுத் தேவை கருதி, ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 11ம் தேதி தடை விதித்தது.

நாட்டில் தற்போது இக்கட்டான சூழ்நிலை நிலவி வருவதால் உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் மற்றும் அதன் மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டு வந்த சுங்க வரி ரத்து செய்ய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் தேவைக்கு ஏற்ற வகையில் ரெம்டெசிவிர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் மருந்து நிறுவனங்களுக்கும் இதன் மூலம் உற்பத்தி செலவு குறையும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுநலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும்போது, ரெம்டெசிவிருக்கு​ ​சுங்க வரி விதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து கடந்த வாரம் மருந்து நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் ரெம்டெசிவிர் விலையை ரூ.3ஆயிரத்து 500க்குள் இருக்குமாறு குறைக்க வேண்டும் என்றும் அரசு மருந்து நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று ரெம்டெசிவிரை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் விலையை ரூ.3 ஆயிரத்து 500 க்குள் வைத்துக்கொள்ள முயற்சி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!