இந்திய கப்பற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த செங்கடல்
உலக வர்த்தகத்தில் 11-15% வர்த்தகமும், உலக கப்பல் போக்குவரத்தில் 30% சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடக்கிறது. அது தடுக்கப்பட்டால் ஆப்ரிக்காவை சுற்றித்தான் போக்குவரத்து நடக்க வேண்டும். இதனால் அதன் கட்டணம் இரண்டு மடங்கும், காலதாமதமும் மூன்று மடங்கும் ஆகும். எனவே செங்கடல் உலக வர்த்தகத்தின் உயிர் நாடி என்று சொல்லலாம்.
அங்கே ஏற்கனவே சோமாலியாவின் கடற்கொள்ளைக்காரர்கள் ஆட்டம் அதிகம், அதனால் பெரும் சீரழிவுகளை சந்தித்த போது அவர்களை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தது இந்திய கடற்படை.
அதன் ஆளுமை எந்த அளவிற்கு என்றால் ஒரு முறை சீனாவின் நட்பு நாடு ஒன்றின் கப்பல் சோமாலியா கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டது. அதுபோன்ற நேரத்தில் அந்த கப்பல் மாலுமிகள் உதவி கோரி கோரிக்கை விடுப்பார்கள். அதை உலகளவில் கேட்க முடியும் என்றாலும், அருகில் இருக்கும் கப்பல்கள் தான் அதற்கு உதவ முடியும்.
அப்போது அதன் அருகில் முப்பது நிமிட பயண தூரத்தில் சீனாவின் கப்பற்படை கப்பல் இருந்தது. ஆனால் அந்த உதவி கோரலை ஏற்கவில்லை. ஆனால் அதை தாண்டி 2 மணி நேர பயணத்தில் இருந்த இந்திய கடற்படையின் கப்பல் தான் ஆதரவு தருவதாக உறுதி சொன்னபோது, சீனாவின் கப்பல் அங்கிருந்து வெளியேறியது. இந்திய கப்பற்படை துரத்தி சென்று கப்பலை காப்பாற்றியது.
இது போன்ற பல உலக நாடுகளின் கப்பல்களை, ஏன் சீன கப்பல்களையும், அமெரிக்காவின் கப்பல்களையும் இந்தியா காப்பாற்றி வருவதால் தான் அங்கே கப்பல் போக்குவரத்து இன்று நடக்கிறது என்று ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் காசா போரில் இஸ்ரேலை நேரடியாக தாக்க முடியாத ஈரான், ஏமனில் இருந்த ஹௌதி தீவிரவாத குழுக்கள் மூலம் தாக்கியது. முதலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களில் ஆயுதங்கள் இருப்பதாக சொல்லி அதன் தாக்குதல் தொடங்கியது. பின்பு மற்ற நாடுகளின் கப்பல்கள் மீதும் அந்த தாக்குதலை கண்மூடித்தனமாக செய்தது.
அதனால் கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. அந்த வழியே கப்பல்கள் செல்வது முடியாமல் போனது. அதன் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் அந்த அவ்வழியாக கப்பல்களை இயக்க பல கப்பல் நிறுவனங்கள் மறுத்து விட்டன. அதையும் மீறி பயணம் செய்யும் கப்பல்களுக்கு இன்சூரன்ஸ் தொகை மூன்று மடங்காக உயர்ந்தது.
அதன் தாக்கம் எந்தளவிற்கு என்றால், திருப்பூரில் இருந்து செல்லும் ஒரு கண்டெய்னருக்கு 2500 டாலர் என்றிருந்த தொகை மூன்று மடங்காக உயர்ந்து 7500 டாலர் ஆனது. மேலும் அங்கே கண்டெய்னர்கள் ப்ளாக் ஆனதால் உலகளவில் கண்டெய்னர் பற்றாக்குறையால் உலகெங்கும் வாடகை அதிகரித்தது. அதனால் உலக வர்த்தகமே பாதிக்கப்படது.
திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த பல கண்டெய்னர்கள் கூடுதல் கட்டணத்தால் பெரும் பின்னடைவை சந்தித்ததால், எந்றுமதியையே நிறுத்த வேண்டியதாகி விட்டது என்றால் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.
அந்த சூழலில் உலகளவில் மிகப்பெரிய கப்பல் படை கொண்ட அமெரிக்காவாலோ, அல்லது அடுத்த உலகை ஆளப்போவதாக சொல்லும் அதைவிட பெரிய சீனக்கப்பற்படையோ அதை தடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் சீனாவின் மிக முக்கிய வர்த்தகப்பாதை அதுதான்.
இந்தியா உட்பட ஈரானின் நண்பர்கள் என்பதால் அதை தடுக்கச்சொல்லி கேட்ட உதவிகளை சீனா புறம் தள்ளியது. அதனால் இந்தியாவின் கப்பற்படை உள்ளே நேரடியாக இறங்கியது. ஹௌத்தி தீவிரவாதிகளின் கப்பல்களை சூறையாடியது. இந்தியாவின் முந்தைய கோரிக்கையை நிராகரித்த, ஈரானால், இப்போது இந்தியாவிடம் அதை நிறுத்தச் சொல்லி கேட்க முடியவில்லை.
அந்த வேட்டையாடலில் செங்கடலில் ஹௌத்தியின் ஆதிக்கம் குறைந்தது. 136 ஹௌத்தி தீவிரவாதிகளும் சிக்கினர். அவர்கள் கப்பலும் பெருமளவில் சேதமடைந்தது. அப்படியொரு தாக்குதலை தாங்கமுடியாத ஹௌத்தி பின்வாங்கியது.
உலக நாடுகள் இந்தியாவிற்கு நன்றி சொல்லத்தொடங்கியது. அங்கே இந்தியாவின் கப்பற்படையின் ஆதிக்கம் அதிகரிப்பதையும், பெரியண்ணன் அமெரிக்காவின் செல்வாக்கை விட இந்தியாவின் ஆதிக்கம் உயர்வதை விரும்பாத அமெரிக்கா, அதன் கப்பற்படைகளை அங்கே அனுப்பியது.
ஆனால் இந்தியாவின் கப்பற்படையை தாக்காத அல்லது தாக்க முடியாத ஹௌத்தி, அமெரிக்க கப்பற்படையை தாக்கியது. அதில் அமெரிக்க கப்பற்படையின் வீரர்கள் 3 பேரும், 8 உளவு விமானமும் ஹௌத்தி தீவிரவாதிகளால் வீழ்த்தப்பட்டது. அதனால் அமெரிக்கா பின்வாங்கியது.
அதன் பின்னர் இந்திய கப்பற்படையின் பாதுகாப்பை அதிகரித்ததால் உலக வர்த்தகம் மீண்டு சகஜ நிலையை தொட்ட போது, உலக நாடுகளின் தலைவர்கள் மோடி அரசுக்கு நேரில் அழைத்து நன்றி சொன்னார்கள். ஆனால் அந்த நாட்டின் மீடியாக்களோ, அல்லது நம் நாட்டின் மீடியாக்களோ மாபெரும் சாதனையான அதைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லை.
இப்போது புரிகிறதா உலக நாடுகள் இந்தியாவின் தலைவரான மோடியை ஏன் மதிக்கிறார்கள்? புரூனே நாட்டின் மன்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியைக்கூட அழைத்ததில்லை, அவர் ஏன் மோடியை மதித்து அழைக்கிறார். அவரது அரண்மனையில் ராஜ மரியாதை செய்கிறார் என்றால் உலக நாடுகள் வல்லரசுகளால் கைவிட்டபோது சின்ன நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் கேட்காமலே பிரதமர் மோடி உதவுகிறார் என்பதால்தான். இன்று குளோபல் சௌத் என்ற நாடுகளின் தலைவராக இந்தியா பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu