சிவப்பு கட்டெறும்பு சட்னி வாங்கலியோ....சிவப்பு கட்டெறும்பு சட்னி..! ...

சிவப்பு கட்டெறும்பு சட்னி வாங்கலியோ....சிவப்பு கட்டெறும்பு சட்னி..!  ...
X

சிவப்பு எறும்பு சட்னி


சிவப்பு கட்டெறும்பு சட்னி சாப்பிட்டால் நினைவாற்றல் கூடுமாம். சட்டீஸ்கர்ல விற்கிறாங்க...

பொதுவாக வீட்டில் எறும்பு வந்திட்டா, உடனே எறும்பு பொடி போடுவோம். இல்லன்னா, சீமெண்ணெய் ஊத்துவோம். ஆனா சட்டீஸ்கர் மாநிலத்தில் இதற்கெல்லாம் வேலையே இல்ல. அங்கே ஸ்பெஷல் உணவே சிவப்பு சுள்ளெறும்பு தான். இதன் முட்டைகளை கொண்டு இனிப்பு பதார்த்தம் செய்வாரர்களாம்.


இந்த எறும்புகளை கூட மிளகுப்பொடி சேர்த்து சட்னியாக அரைத்து சாப்பிடுவர்களாம்... காடுகளுக்கு சென்று சுள்ளெறும்புகளை பிடித்து அவற்றின், முட்டைகள் மற்றும் எறும்புகளை வெயிலில் நன்றாக உலர்த்தி, தக்காளி, கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, மிளகாய், உப்பு மற்றும் சர்க்கரை சிறிது சேர்த்து அரைத்த இந்த சட்னிக்கு பெயர் சப்ரா. நம்மூர்ல, எதாவது சாப்பாட்டுல எறும்பு இருந்து, அம்மா, பாட்டிக்கிட்ட சொன்னா, எறும்பை சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியும்டான்னு சொல்வாங்க.

அப்படி சாப்பிட்டும் நாம் ஏன் கண்ணாடி போட்டிருக்கிறோம் என்று தெரியவில்லை . நம்மூர்ல கூழ் விற்கிற மாதிரி இது ரோட்டோரங்களில் வைத்து விற்பாங்களாம். சட்னியில் நமக்கு தேவையான புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைய இருக்கும். நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் இதுல நிறைய இருக்கும். இந்த சுள்ளெறும்பு சட்னியை சாப்பிட்டா உடல் சுறுசுறுப்பாகவும் , நினைவாற்றலை பெருக்கவும் செய்யுமாம். ஆனால் இதனை சாப்பிட சட்டீஸ்கர் வரை போகனும். வேறு எங்கேயும் இது கிடைக்கிற மாதிரி தெரியல.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!