ஓட்டுப்பதிவு குறைவது ஏன்? அரசியல் ஆர்வம் குறைகிறதா?
தேர்தல் ஆணையம் கோப்பு படம்
வாக்குப்பதிவின் மீதான ஆர்வம் குறைந்துவருவது எதைக் காட்டுகிறது? தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் வரவில்லை. இதனை தேர்தல் ஆணையம் சீரியஷாக கவனிக்க வேண்டும். அரசியல்வாதிகள் மீதும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைகிறதா? நாம் வாக்களித்து என்ன ஆகப் போகிறது என்ற எண்ணம் மக்களிடையே வந்து விட்டதா?
ஏன் இவ்வளவு மாற்றம்? இதை தேர்தல் ஆணையம் கண்டறிந்து தேர்தலில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். மக்களிடையே ஜனநாயக நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன்னர் தேர்தலில் மக்கள் ஓட்டளிக்க ஆர்வம் காட்டாததன் காரணத்தை கட்டாயம் கண்டறிய வேண்டும்.
அதனை சரி செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பேனர்களை வைத்ததோடு வேலை முடிந்தது என இருக்கும் மாவட்ட நிர்வாகங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி, வாக்காளர்கள் மத்தியில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமாவது அதிகாரிகள் மிகுந்த சுதந்திரத்துடனும் முழு வேகத்துடனும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஓட்டுப்பதிவு அதிகரித்தால், தேர்தல் முடிவுகளில் பல மாற்றங்கள் ஏற்படும். தவிர அதிகரிக்கும் ஒட்டுப்பதிவு சதவீதம் மாநிலம் முழுவதும், நாடு முழுவதும் ஒரே மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தாது. தொகுதி வாரியாக தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக சில கட்சிகள் ஓட்டுப்பதிவை அதிகரிக்க விரும்புவதில்லை. இதனை தேர்தல் ஆணையம் மிகவும் சீரியஷாக கவனிக்க வேண்டும்.
ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களை மக்கள் வேடிக்கை பார்க்க கூட விரும்பவில்லை. வேட்பாளர் ஓட்டு கேட்டு வருவதற்கும், தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வரும் போது கூட்டம் சேர்ப்பதற்கும் கூட ஒவ்வொரு அரசியல் கட்சியும் மிகப்பெரும் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. வீதி, வீதியாக ஓட்டு கேட்டு வருபவர்களை வேடிக்கை பார்க்க கூட மக்கள் விரும்பாததை பல இடங்களில் கவனிக்க முடிந்தது.
அந்த அளவு மக்கள் அரசியலை விட்டு விலகி நிற்கின்றனர். இது மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறி. மக்களிடையே அரசியல் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் ஓட்டுப்பதிவை அதிகரிக்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu