இன்ஸ்ட்ராகிராமில் ராகுலுக்கு கிடுகிடுவென உயர்ந்த மவுசு
தேர்தல் முடிவுகளுக்கு பன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நாடு முழுவதும் புதிய மரியாதை கிடைத்துள்ளது. ராகுலை புகழ்ந்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக மோடிபோன்ற ஒரு பிரம்மாண்டமான தலைவரை எதிர்த்து இவ்வளவு பெரிய வெற்றியை பெற்ற ராகுல்காந்தியின் முயற்சியை அத்தனை பேரும் பாராட்டி வருகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் ராகுல்காந்தியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
காங்கிரஸ், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்த நிலையில் இந்த முறை 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் விடியோக்கள் தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று இளைஞர்களிடம் சென்றடைவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ராகுலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 15 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu