/* */

நாளை 12-ந் தேதி வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி..!

காங்., தலைவர்களுள் ஒருவரான ராகுல்காந்தி நாளை வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.

HIGHLIGHTS

நாளை 12-ந் தேதி வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி..!
X

ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் (கோப்பு படம்)

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆனிராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சுரேந்திரன் (பா.ஜனதா) ஆகியோர் தோல்வியை தழுவினர்.

இதேபோல் ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 2 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் எந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்வார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளது.

இந்தநிலையில் வயநாடு தொகுதியில் வெற்றி வாய்ப்பு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வயநாடு செல்கிறார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்ததோடு அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

இந்த நிகழ்வுகளின் அடிப்படையில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, ரேபரேலி தொகுதியின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி களம் இறங்க வாய்ப்புகள் உள்ளது என்றும் காங்., கட்சியினர் கூறி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2024 5:54 AM GMT

Related News

Latest News

 1. கலசப்பாக்கம்
  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
 2. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
 3. திருவண்ணாமலை
  டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
 4. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
 6. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 7. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 8. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 10. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்