மல்யுத்த வீரர்கள் முன் வைக்கப்படும் கேள்விகள் ?

மல்யுத்த வீரர்கள் முன் வைக்கப்படும் கேள்விகள் ?
X

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள்(பைல் படம்0

டெல்லியில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடி வரும் மல்யுத்த வீரர்களிடம் மக்கள் சில கேள்வி களை முன்வைத்துள்ளனர்.

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்டத்தில் நிமிடத்திற்கு நிமிடம் இந்த செய்தி வந்துட்டே இருக்கு ஆனால் எதிர் தரப்பு கேள்வி இப்படி உள்ளது. வாங்கிய மெடலை எல்லாம் கங்கையில் வீசுவோம். நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் மக்கள் கேட்கும் எளிமையான கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

புகார் சொல்லி போராட்டம் நடத்தும் நீங்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி பள்ளியை சார்ந்தவராக இருக்கீங்களே அது எப்படி.? உங்கள் பயிற்சி பள்ளியை நடத்தும் முதலாளி பெயர் என்ன? அவர் சார்ந்த அரசியல் கட்சி எது? போராட்டம் நடத்தும் நீங்கள் எல்லோரும் ஒரே சமூகமாகவே இருப்பது எப்படி?

உங்களால் குற்றம் சுமத்தப்பட்ட நபரை முதலில் கைது செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் என வலியுறுத்த காரணம் என்ன? அதாவது விசாரணைக்கு பின்னரே குற்றம் சுமத்தப்பட்டவர் கைது செய்யப்படுவார். அதுவரை பொறுத்துக் கொள்ள மறுப்பது ஏன்?

நீங்கள் புகார் அளி்த்துள்ளவர் விசாரணையில், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் எப்படியும் ஜெயிலுக்கு உள்ள தானே போகப்போறார்? குற்றம் சுமத்தும் நீங்கள் ஏதாவது ஆதாரம் வைத்து இருக்கீங்களா? இல்லை என்றால் நீங்கள் குற்றம் சாட்டும் நபர் சொல்வது போல உண்மை கண்டறியும் சோதனைக்கு உங்களை உட்படுத்திக் கொள்ள தயாரா?

நாட்டுக்காக பதக்கம் வாங்கியதாக சொல்றீங்க. நீங்கள் குற்றம் சாட்டும் இந்திய குத்துசண்டை அமைப்பின் தலைவர் 11 ஆண்டுகள் சர்வதேச அளவில் இதே குத்து சண்டை போட்டியில் சாதித்து தான் தலைவர் பொறுப்பில் உள்ளார். அது தெரியுமா? உள்நாட்டில் எத்தனையோ இளம் வீரர்கள் தன்னை நிரூபிக்க காத்திருக்கும் பொழுது நீங்கள் நேரடியாக சர்வதேச போட்டியில் மட்டும் கலந்து கொள்வோம் என்று அடம்பிடிக்க காரணம்?

கடைசியாக நீங்கள் எல்லோரும் உள்நாட்டு போட்டியில் கலந்து கொண்டது எப்பொழுது? உள்நாட்டில் உங்களை விட பல திறன் கொண்ட இளம் வீரர்கள் உடன் மோதும் பொழுது உங்கள் ரேங்க் குறைந்து போகும் என்ற பயமா? உள்நாட்டில் திறன் கொண்ட ஒரு வீரருடன் மோதி நீங்கள் தோல்வி அடைந்தால் உங்கள் வெளிநாட்டு வாய்ப்பினை இழக்க நேரிடும் என்ற பயமா?

சம்மா சும்மா சமூக அமைதியைக் கெடுக்க போராட்டம் செய்யும் நீங்கள் நீதிமன்றம் நாடத் தயங்குவது ஏன்? வெகுஜனம் மீடியா செய்தியை நம்பி உங்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு கோஷம் போடும். அதனால் தான் அவர்கள் வெகு ஜனமாகவே இருக்காங்க.

எல்லாக் காலமும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. நிச்சயம் உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும். அதுசரி உங்கள் போராட்டத்திற்கு பிற பிரிவுகளில் உள்ள சர்வதேச வீரர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் ஆதரவு பெற்ற விவசாய சங்கங்களும், சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் வலிய முன்வந்து ஆதரவு கொடுத்து பிரச்னையை பெரிதாக்குவதன் காரணம் என்ன? என்ற பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

அப்படியே இருக்க மாட்டான் வெகுஜனம். ஒரு நாள் மீடியா செய்திகளை ஓரம் கட்டி இங்க உள்ள ஒவ்வொரு விவகாரத்தையும் வெகுஜனம் அவன் சுய புத்தியில் இருந்து கேள்வி கேட்கும். அந்த நாள் வர ரொம்ப காலம் இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!