விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி55

விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி55
X

பிஎஸ்எல்வி சி55 - கோப்புப்படம் 

பிஎஸ்எல்வி சி55 ராக்கெட் ஏப். 22ம் தேதி மதியம் 2.19 மணிக்கு சிங்கப்பூர் நாட்டின் செயற்கை கோளை ஏவுகிறது

குறைந்த செலவு, துல்லியமான தொழில்நுட்பம் போன்ற காரணங்களால் இந்தியா விண்வெளி மார்க்கெட்டை கைப்பற்றி உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செயற்கை கோள்களை இந்தியா விண்ணில் ஏவி வருகிறது. பல கிழக்கு ஆசிய நாடுகளின் செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

இப்போது சிங்கப்பூர் நாட்டின் செயற்கை கோளை விண்ணில் ஏவ உள்ளது. இந்த செயற்கை கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி55 ராக்கெட் வரும் ஏப்.,22ம் தேதி மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. அதனுடன் வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

அந்த வகையில் சிங்கபூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டது.


இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ராக்கெட்டில் ஏவப்பட உள்ளது. எஸ்எல்வி சி55 ராக்கெட் வரும் ஏப்.,22ம் தேதி மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு இன்னும் பல வெளிநாடுகளின் செயற்கை கோள்களை ஏவும் ஒப்பந்தம் கிடைத்து வருவதாகவும், விரைவில் விண்வெளித்துறையில் இந்தியா மிக உயர்ந்த நாடாக வளர்ந்து நிற்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.

33 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 297 வாடிக்கையாளர் செயற்கைக்கோள்கள் குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் (LEO) செலுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, ராக்கெட் விண்வெளி ஆய்வு பணிகள் மற்றும் வானிலை ஆய்வு, வழிசெலுத்தல் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!