பதவி உயர்வினை நிறுத்தக்கூடாது : ஒடிஸ்ஸா நீதிமன்றம் உத்தரவு..!

பதவி உயர்வினை நிறுத்தக்கூடாது :  ஒடிஸ்ஸா நீதிமன்றம் உத்தரவு..!
X

கோப்பு படம்


TET தேர்ச்சி இன்மையைக் காரணம் காட்டி பதவி உயர்வினை நிறுத்தக் கூடாது.

NCTE இன் அறிவிப்பாணை வரும் நாளுக்கு முந்தைய நாட்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க TET தேர்ச்சி கட்டாயம் என்றிருந்தாலும், உடனடியாக அவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

அவர்களுக்குப் பல வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு என்பது ஒருவரின் பணிக்காலத்தில் கிடைக்கப் பெறும் முக்கியமான பலனாகும். TET தேர்ச்சி கட்டாயம் என்பது இடையில் வந்த புதிய விதியாகும். ஏற்கனவே இருப்பவர்களுக்கும் அதை கட்டாயமாக்கும் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உருவாகத்தான் செய்யும்.

எனவே TET தேர்ச்சி இல்லை என்பதைக் காரணம் காட்டி, அவர்களுக்கான பதவி உயர்வை மறுக்கக் கூடாது. காலம் காலமாக கிடைக்கும் பதவி உயர்வை வழங்கிவிட்டு, பதவி உயர்வு வழங்கப்பட்ட நாளில் இருந்து மூன்றாண்டு காலமாவது அவர்கள் TETல் தேர்ச்சி பெற வாய்ப்பு தரப்பட வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுடன் பழைய ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கலாம் என ஒடிஸ்ஸா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
நோயாளியைப்  பாக்கப்  போறிங்களா..? கட்டாயம் இதெல்லாம்  தெரிஞ்சிட்டு போங்க...!