ராணுவ வீரரை பார்த்து கண்ணீர் வடித்த பிரதமர்....என்ன சம்பவம் அது?
இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.
Lal Bagathur Sastri-1965 இல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின்போது, அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவ வீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். அப்போது காயமடைந்த ராணுவ வீரர்களை பார்த்தார். இறுதியில் எழுந்திருக்க முடியாமல் படுத்தே இருந்த ராணுவ வீரரிடம் அருகில் சென்றார். அருகில் இருந்த டாக்டர், இந்த ராணுவ வீரரின் பல உறுப்புகள் சேதம் அடைத்துள்ளது. அதனால் அவர் மிகுந்த கண்காணிப்பில் உள்ளார், அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக்கூறினார்.
சாஸ்திரி அவர்கள் மிகவும் அருகில் சென்று அவருடைய தலைக்கு அடியில் தன்னுடைய கைகளை கொடுத்து தாங்கினார். அந்த ராணுவ வீரனின் கண்களிலிருந்து கண்னீர் பெருக்கெடுத்தது. சாஸ்திரி அவர்கள் அவரோடு கீழ்வருமாறு உரையாடினார்.
சாஸ்திரி: மேஜர், நீங்கள் உலக புகழ் பெற்ற இந்திய ராணுவத்தின் மேஜர். இந்திய ராணுவம் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்றது. தயவுசெய்து உறுதியாக இருங்கள் அழாதீரகள். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.
மேஜர்: சார், இந்த கண்ணீர் என்னுடைய வலியினாலோ காயத்தினாலோ அல்ல. இந்த கண்ணீருக்கு காரணம் நான் ஒருநாள் என்னுடைய பிரதமமந்திரியை பார்ப்பேன் அப்போது அவருக்கு ராணுவ வணக்கம் தெரிவிப்பேன் என்ற கனவுதான். இன்று உங்களை நேரில் பார்த்து விட்டேன் ஆனால் என்னால் எழுந்து உங்களுக்கு ராணுவ வணக்கம் தெரிவிக்க முடியவில்லையே என்ற வருத்தம் தான் என்னை வாட்டுகிறது. சாஸ்திரி கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
வாழ்க்கையில மிகப்பெரிய பாடத்தை இந்தநிகழ்வு உலகிற்கு தந்தது. வாழ்க்கையில் சில சமயங்கள் நம்மால் எதுவுமே செய்யமுடியாத தருணங்கள் வரலாம்... அவர் எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும்கூட.... எனவே, வாழுங்கள் ! மகிழ்வோடு வாழுங்கள்.. பிறரை மகிழ்வித்து வாழுங்கள்..!!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu