பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயிற்சி பெறுவது எப்படி?
பிரதமர் நரேந்திர மோடி.(கோப்பு படம்)
பாரத பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற வாலிபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு, தொழில் தொடங்க கடனும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் நோக்கம் கிராமப்புறங்களில் வாழும் பின்தங்கிய மக்களுக்கு உரிய சுய தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அரசு சான்றிதழ் வழங்கி, வங்கியில் தொழிற் கடன் பெற்று தந்து, அரசாங்கம் வழங்கக்கூடிய மானியத்தை பெற்று தந்து சுய தொழில் அதிபர்களாக உருவாக்குவது தான்.
திட்டத்திற்கான தகுதிகள்
கிராமப்புறத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கல்வி தகுதி 8 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்
பயிற்சி காலம் 10 நாட்கள் முதல் 30 நாட்கள். நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. பயிற்சியின் போது தேநீர் மற்றும் மதிய உணவு இலவசம். ஒருவருக்கு ஒரு பயிற்சி மட்டுமே வழங்கப்படும்.
பயிற்சி விபரங்கள்
பெண்களுக்கான தையல் பயிற்சி, ஆண்களுக்கான தையல் பயிற்சி, பெண்களுக்கான எம்ராய்டரிங் பயிற்சி, செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சி, கணினி பயிற்சி, பெண்களுக்கான அழகு கலை பயிற்சி, இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சி, கோழி வளர்ப்பு பயிற்சி, ஆடு வளர்ப்பு பயிற்சி, செம்மறி ஆடு வளர்ப்பு, துரித உணவு தயாரித்தல் பயிற்சி, மீன் வளர்ப்பு பயிற்சி, அலைபேசி பழுது மற்றும் சரிபார்த்தல் பயிற்சி, வெல்டிங் மற்றும் ஃபேப்ரிகேஷன் பயிற்சி, போட்டோஷாப் லேமினேஷன் பயிற்சி, வீடுகளுக்கான எலக்ட்ரீசியன் பயிற்சி, மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் வளர்ப்பு பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி, தச்சு வேலை பயிற்சி, பாதுகாப்பு அலாரம் குகை உணர்வு சாதனங்கள் பொருந்துதல் மற்றும் சர்வீஸ் பயிற்சி மற்றும் பல பயிற்சிகள் தேவைக்கு ஏற்படும்.
முன்னோடி வங்கியில் கடன்
இத்திட்டத்தில் சேர ஆதார் எண், ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அவரவர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள RSETI ( ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ) "முன்னோடி வங்கி" யினை தொடர்பு கொண்டு இத்திட்டத்தினை பெற்றுக் கொள்ளலாம். கடன் வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மாவட்டந்தோறும் இந்த பயிற்சிகள் இடைவிடாமல் நடத்தப்பட்டுக் கொண்டே உள்ளன. எனவே தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் இந்த திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu