பெரிய திட்டத்தை தட்டி துாக்கிய சந்திரபாபு.. அள்ளிக் கொடுத்த பிரதமர்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மாநிலங்களுக்கு தேவையான பெரிய அளவிலான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெறுவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று தற்போது ஒரு பெரிய திட்டத்தை தட்டி துாக்கியுள்ளார். 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் தொழிற்சாலையை மத்திய அரசிடம் கேட்டு வாங்கியுள்ளார். மோடி அரசும் இந்த திட்டத்தினை ஆந்திராவிற்கு வழங்கி உள்ளது.
மிகவும் ஊக்கமளிக்கும் வகையில், சிஎம்டிஜி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பிபிசிஎல் மூத்த நிர்வாகிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தனர். ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. முதலீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்தால், நிறுவனத்திற்கு நிலங்கள் மற்றும் சில சலுகைகள் வழங்கப்படும் என்று ஆந்திர அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சந்திரபாபு மூத்த நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்திற்குப் பிறகு, நாயுடு ட்வீட் செய்தார், ஆந்திரப் பிரதேசத்தில் 70,000 கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வழித்தடத்தை நிறுவுவதை நாங்கள் ஆராய்ந்தோம். 90 நாட்களில் விரிவான திட்டம் மற்றும் சாத்தியக்கூறு அறிக்கையை கோரியுள்ளேன். இந்த திட்டத்திற்கு சுமார் 5,000 ஏக்கர் நிலம் தேவைப்படும், இது தொந்தரவின்றி எளிதாக நடப்பதற்கு ஆந்திர அரசாங்கம் முழு உதவிகளை வழங்கும் என கூறியுள்ளார். திட்டம் நிறைவேறினால், மச்சிலிப்பட்டினம் அல்லது காக்கிநாடாவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் ஆந்திரமாநில வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu