குடியரசுத்தலைவர் தேர்தல்: தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு உண்டா..?

குடியரசுத்தலைவர் தேர்தல்: தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு உண்டா..?
X

தற்போதைய கேரள ஆளுநர் ஆரிஃப் முஹம்மது கான், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு 

presidential election of india-ஆளும் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார் என்ற பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.

presidential election of india-குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்படவுள்ள வேட்பாளர் யார் என்பதே நடப்பு அரசியில் பரபரப்பான கேள்வி.

தற்போதைய சூழலில் ஆளும் கட்சி சார்பில் 4 பேர் அடிபட்டாலும் கூட 2 பேருக்கு மட்டுமே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பா.ஜ.க சார்பில் பேசப்படுவதில் முன்னணியில் இருப்பவர் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு. இவர் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தவர். கடந்த குடியரசுத்தலைவர் தேர்தலிலும் இவர் பெயர் பேசப்பட்டது.

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்

குடியரசுத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே யார் வேட்பாளர் என்ற இந்த பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இரண்டாவதாக இருப்பவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆரிஃப் முஹம்மது கான். இவர் தற்போதைய கேரள ஆளுநர்.

தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் ஆனந்திபென் படேல் உட்பட இன்னும் சிலரது பெயர்களும் அடிபட்டாலும் கூட இம்முறை இந்த இரண்டு பேருக்கு மட்டுமே அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. காரணம், சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த முர்முவை குடியரசுத்தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதன் மூலம் 6 மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலில் பழங்குடியின வாக்குகளை பெற இது உதவும்.

presidential election of india-மேலும் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியுடனும் ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்களுடனும் நல்ல இணக்கமான நட்பு வைத்திருப்பவரும் கூட.

ஆரிஃப் முஹம்மது கானையும் தேர்வு செய்ய சாத்தியமான சூழ்நிலை உள்ளதாகவும் பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது. நபிகள் குறித்த சர்ச்சை கருத்துக்களால் வளைகுடா நாடுகள் கொதித்துக் கிடக்கின்றன. இதில் கத்தார், இந்தியா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் இந்தியாவுடன் நெருக்கமான உறவில் உள்ள இஸ்லாமிய நாடுகள் கூட இந்தியாவை பகைத்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம். அதனால் ஒரு இஸ்லாமியரை குடியரசுத்தலைவராக தேர்வு செய்து இஸ்லாமிய நாடுகள் மத்தியில் ஒரு நற்பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

அதனால், நம்மைப் பொறுத்தவரை இந்த இரண்டு பேருக்கு மட்டுமே கூடுதல் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself