குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத் தலைவரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் இரண்டு துடிப்பான ஜனநாயக நாடுகள் என்றும், பெரிய திறந்த சந்தைப் பொருளாதாரங்கள் மற்றும் பன்முக தன்மை வாய்ந்த சமூகங்களை கொண்டிருப்பவை என்றும் கூறினார். இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் பொதுவான பார்வையை பகிர்ந்து கொள்கின்றன என்றும், அர்ப்பணிப்பு உட்பட சர்வதேச விதிமுறைகளின் படி ஒழுங்குமுறைகளுடன் கூடிய சீர்திருத்தம் மற்றும் பயனுள்ள பலதரப்பு அம்சங்களை பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார். வரவிருக்கும் தசாப்தத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பகிர்ந்து கொள்ளும் தொலைநோக்கு உத்தி மூலமான கூட்டாண்மை மிக முக்கியமான உறவுகளில் ஒன்று என்றும், உறவுகளை வலுப்படுத்துவது ஐரோப்பிய யூனியனைப் போலவே இந்தியாவிற்கும் முன்னுரிமை பணியாகும் என்றும் அவர் தெரிவித்தார். காலநிலை நடவடிக்கை, தூய்மையான எரிசக்தி, நிலையான வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம், ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு கண்டுபிடிப்புகளில் ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மை இந்த துறைகளில் இலக்கை எட்ட இந்தியாவிற்கு உதவும்.
இந்தியாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரர் என்றும், அந்நிய நேரடி முதலீட்டின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார உறவுகளில் முழு திறனையும் வெளிப்படுத்தும் என்று அவர் கூறினார். தடையற்ற சந்தைப் பொருளாதாரங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகள் அதன் பொருளாதார ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியதத்துவம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu