நிலாவில் என்னென்ன இருக்கு? மகிழ்ச்சியை பகிர்ந்த இஸ்ரோ

இஸ்ரோ சந்திராயன்- 3 ராக்கெட் மூலம் சந்திரனுக்கு பிரக்யான் ரோவரை அனுப்பியது. இந்த ரோவர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலாவில் தரையிரங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் நிலாவை படம் எடுத்து அனுப்பியது. நிலாவில் ஆய்வுப்பணிகளை தொடங்கியது. ரோவரின் ஒவ்வொரு விநாடிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். ரோவர் சமீபத்தில் ஆய்வு செய்து இஸ்ரோவிற்கு அனுப்பிய தகவலில், நிலாவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை உறுதி செய்துள்ளது
இஐ குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை அளவீடுகள் மூலம் ரோவர் உறுதிப்படுத்தியது. சந்திரயான் -3 ரோவரில் உள்ள லிப்ஸ் என்றழைக்கப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி செய்தி சோதனையில் இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கருவி ஆப்டிக்ஸ் அமைப்புகளுக்கான ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.இதன் மூலம் நிலாவில் அலுமினியம், இருப்பு, கால்சியம், குரோமீயம், மாங்கனீஸ், சிலிகான், டைட்டானியம் உள்ளிட்ட 8 தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது.ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்துள்ள பிரக்யான் ஹைட்ரஜன் இருப்பதையும் தேடி வருகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu