பாஜக கூட்டணியில் இணையுமா தேசிய மாநாட்டு கட்சி?

பாஜக  கூட்டணியில் இணையுமா தேசிய மாநாட்டு கட்சி?
X

உமர் அப்துல்லா மற்றும் மோடி 

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்த பிறகு அங்குள்ள அரசியல் சூழ்நிலைகள் மாறி வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தேசிய மாநாட்டு கட்சி தான் ஆட்சி அமைக்க இருக்கிறது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சி தலைமையில் உருவாக இருக்கும் அந்த ஆட்சியில் காங்கிரஸ் இருக்குமா? என்று கேள்விகள் எழும்பி வருகிறது.

ஏன் என்றால் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளி வந்த பிறகு தேசிய மாநாட்டு கட்சியின் போக்கே மாறிவிட்டது.

தேர்தலுக்கு முன்பு வரை ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டு வருவோம் அது காஷ்மீரிகளின் உரிமை அதை எந்த வழியிலும் அடைவோம் என்று முழங்கி வந்த உமர் அப்துல்லா தேர்தல் முடிவுகள் வெளி வந்த பிறகு 370 பிரிவா? அது காஷ்மீரில் இருந்ததா? அது நீக்கப்பட்டதா? அதை திருப்பி கொண்டு வருவோம் என்று நான் கூறினேனா? வாய்ப்பே இல்லை. எங்களுக்கும் காஷ்மீர் 370 பிரிவு ஆதரவிற்கும் சம்பந்தமே கிடையாது. நாங்கள் ஒன்றுபட்ட இந்துயாவுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம். இப்போதைய நிலையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி ஜம்மு காஷ்மீரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே என்னுடைய கடமை என்று பேசி காங்கிரஸ் கட்சிக்கு முதல் அதிர்ச்சியை அளித்தார்.

உமர் அப்துல்லாவின் கருத்திற்கு ஜம்மு காஷ்மீர் மக்களிடையே மிகுந்த ஆதரவு கிடைத்தது. இதனால் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் ஜம்மு பகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற மூன்று இந்து எம்எல்ஏக்களின் ஆதரவையும் பெற்று விட்டார்.

இதனால் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமலே தேசிய மாநாட்டு கட்சி தனியாக ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய மாநாட்டு கட்சியின் தலைமையில் உருவாகும் புதிய அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவிகளையும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சபாநாயகர் பதவியையும் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆனால் உமர் அப்துல்லா காங்கிரசின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டார். ஜம்மு காஷ்மீரில் காங்கிரசின் தேசிய மாநாடு கட்சியின் வெற்றிக்கு எந்த ஒரு பங்கும் இல்லை. காங்கிரசுக்கு கிடைத்த 6 எம்எல்ஏக்களும் எங்களால் தான் காங்கிரஸ் கட்சிக்கு. கிடைத்தது. அதனால் அமைச்சர் பதவிகள் சபாநாயகர் பதவி என்று கனவு காண வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தார்.

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியுடன் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைக்க முக்கியமான காரணம் இந்துக்கள் அதிகம் உள்ள ஜம்மு பகுதியில் காங்கிரஸ் கட்சியால் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை தான். ஆனால் ஜம்முவில் உள்ள இந்துக்கள் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளித்தனர். காங்கிரஸ் ஜம்முவில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு ரஜோரி என்கிற முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அவரும் முஸ்லிம் தான்.காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 5 இடங்களிலும் முஸ்லிம் எம்எல்ஏக்கள் தான் அவர்களும் காங்கிரசால் வெற்றி பெறவில்லை.தேசிய மாநாட்டு கட்சியால் தான் வெற்றி பெற்றார்கள்.

இதனால் உமர் அப்துல்லா காங்கிரசை எக்ஸ்டிரா லக்கேஜாக நினைக்க ஆரம்பித்து ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டார். இதனை முன் வைத்து ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி பாஜகவுட ன் கை கோர்க்குமா? என்று செய்திகள் பரவ ஆரம்பித்து விட்டன.

இது நிஜமாகுமா? தேசிய மாநாட்டு கட்சி பாஜக கூட்டணிக்கு வருமா? ஜம்மு காஷ்மீரில் பாஜக தேசிய மாநாட்டு கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையுமா? என்றால் அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு தான். ஆனால் காங்கிரஸ் இல்லாத தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி அமைய பாஜகஉமர் அப்துல்லாவிடம் பேசி வருகிறது. அது நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது. அது நடந்தாலே போதும் ஜம்மு காஷ்மீரில் நடைபெறுவதும் பாஜக கூட்டணி ஆட்சி மாதிரி தான்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!