கனரா வங்கியில் வேலை செய்ய வாய்ப்பு!
கனரா வங்கியில் வேலை செய்ய வாய்ப்பு ( மாதிரி படம்)
கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 3 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இதில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4.
இதில், டில்லியில் 100 காலியிடங்களும், கர்நாடகாவில் 600 காலியிடங்களும், கேரளாவில் 200 காலியிடங்களும், தமிழகத்தில் 350 காலியிடங்களும், தெலுங்கானாவில் 120 காலி இடங்களும் உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி என்ன?
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு. விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும், PWBD பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
கனரா வங்கி வேலைக்கு, விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. SC/ST/PwBD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu