பொற்கோவிலுக்குள் ஆபரேஷன் புளூஸ்டார் நடத்திய நினைவு நாள் இன்று..!

பொற்கோவிலுக்குள் ஆபரேஷன் புளூஸ்டார்  நடத்திய நினைவு நாள் இன்று..!
X

பொற்கோயில். (கோப்பு படம்)


ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில் இந்திய ராணுவம் அமிர்தசரசில் பொற்கோயிலினுள் நுழைந்து நடவடிக்கை எடுத்த நாள் ஜூன் 3ம் தேதி.

ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில் இந்திய ராணுவம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயிலினுள் நுழைந்து அதிரடி நடவடிக்கை எடுத்த நாள் ஜூன் 3ம் தேதி.

பஞ்சாபில் 'காலிஸ்தான்" தனி நாடு பிரிவினை கோரி சீக்கிய தீவிரவாதிகள் போராடினர். அவர்களின் தலைவரான பிந்தரன்வாலே வன்முறை அரசியலில் ஈடுபட்டு வந்தார். பஞ்சாபில் இந்த காலிஸ்தான் போராளிகள் பல பயங்கரவாதத் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.


அவர்களை விரட்டியது இந்திய ராணுவம். இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையினரின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க காலிஸ்தான் போராளிகள் சீக்கியர்களின் புனித பொற்கோயிலினுள் ஒளிந்து கொண்டனர்.

அவர்களை அங்கிருந்து வெளியேற்ற பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் பொற்கோயிலினுள் திடீரென நுழைந்து ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த ராணுவ நடவடிக்கையில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். பல வன்முறையாளர்களும் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து காலிஸ்தான் இயக்கம் வலுவிழந்து போயிற்று. எனினும் இந்த நடவடிக்கையே பின்னர் ஒரு சீக்கிய மெய்க்காவலரால் இந்திராகாந்தி படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!