மும்பையில் ஜியோ வேர்ல்டு பிளாசா திறப்பு விழா!
மும்பையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, சர்வதேச அளவிலான ஷாப்பிங் அனுபவத்தை கொடுக்கும் நோக்கில், ஜியோ வேர்ல்டு பிளாசாவை திறந்துள்ளது.
இதில், உலகத்தரமான பிராண்டுகள் முதல், இந்தியாவின் கைவினைப் பொருட்கள் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி தொடங்கியுள்ள ஜியோ வேர்ல்டு பிளாசாவில் பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர், சுனில் ஷெட்டி, தீபிகா படுகோன், கத்ரினா கைஃப், ஆலியா பட் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் நடிகை தமன்னா தனது காதலருடன் கலந்து கொண்டார்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, ஜியோ வேர்ல்டு பிளாசா, இந்திய மக்களை பெருமை அடைய செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
7 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில், 66 வகையான சொகுசு பிராண்ட்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், பொருட்களை வாங்குவதில் மிகவும் தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu