60 நாட்களில் ஒரு லட்சம் கி.மீ.,பிரதமர் மோடியின் சாதனை!

60 நாட்களில் ஒரு லட்சம் கி.மீ.,பிரதமர் மோடியின் சாதனை!
X
72 வயதைக் கடந்துள்ள இளைஞரான நம் பிரதமர் மோடி கடந்த 60 நாட்களாக செய்து வந்த சூறாவளி சுற்றுப் பயணம் மலைக்க வைக்கிறது.

கடந்த மார்ச் மாதமே பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வி்ட்டார். மார்ச் மாதம் முதல் மே மாதம் 30ம் தேதி வரை கிட்டத்தட்ட 60 நாட்கள் மோடி இந்தியாவை எத்தனை முறை சுற்றி வந்தார் என்பதை கணக்கிட முடியவில்லை. பறந்து பறந்து பிரச்சாரம் என்பார்களே அது தான் தற்போதும் நடந்துள்ளது. அந்த அளவு பிரதமர் மோடி அயராது உழைத்துள்ளார்.

கடந்த 60 நாட்களில் மட்டும் 200 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். 25க்கும் அதிகமான Roadshow நடத்தி உள்ளார். மொத்தம் 80 தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். 200க்கும் அதிகமான விமான பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் ஒரு லட்சம் கி.மீ., துாரம் பயணித்துள்ளார். மொத்தம் 200 மணி நேரம் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

இப்படி சூறாவளி சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக மூன்று நாள் தியானத்தில் ஆழ்ந்து வி்ட்டார். இன்று தியானத்தை கலைத்து மீண்டும் தனது வேலைகளை தொடங்க கிளம்பி விடுவார். இனிமேல் ஓய்வு என்பது அடுத்த பிரசாரத்திற்கு பின்னர் தான்.

பாஜகவுக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு இருந்தாலும் மோடி மீது தனி அபிப்ராயம் இருக்கிறது. அவர்கள் மோடியை அரசியல் சாணக்யராகவே கருதுகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!