எல்லை விரிவாக்கத்திற்கு இந்தியா ஆதரவு கொடுக்காது..!
பிரதமர் மோடி, புருனே நாட்டின் மன்னருடன்
உலக அளவில் அதிக பேராசை கொண்ட நாடு சீனா. உலகம் முழுவதையும் வளைத்துப்போட வேண்டும் என்ற அந்த நாட்டின் எண்ணம் காரணமாக சீனாவை சுற்றி உள்ள அத்தனை நாடுகளுடனும் எல்லைத்தகராறு இருந்து வருகிறது. தவிர பல உலக நாடுகளும் சீனாவுடன் முறைத்துக் கொண்டு உள்ளன. ரஷ்யாவே பெரிய அளவில் சீனாவிற்கு ஆதரவு தருவது இல்லை.
அதுவும் சீனா எல்லைப்பிரச்னையில் இந்தியாவிற்கு தரும் தொல்லைகள் மிக அதிகம். இவ்வளவு தொல்லை தந்தாலும், பிரதமர் மோடி, எப்போதுமே சீனாவை கண்டு கொள்ள மாட்டார். அந்த நாட்டின் குணத்தை பிரதமர் மோடி தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்திருப்பதால், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நாம் தான் நம்மை வலுப்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்.
டோக்லாம், கல்வான் எல்லைப்பிரச்னைகளின் போது சீன அதிபர், இந்தியாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த போதும் கூட, நம் பிரதமர் மோடி அந்த நாட்டின் எச்சரிக்கையினை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எந்த பதிலும் சொல்வதில்லை. குறிப்பாக சீனாவை கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில் புருனே சென்ற பிரதமர் மோடி முதன் முறையாக வெளிநாட்டில் இருக்கும் போது, சீனாவிற்கு மறைமுகமான செய்தி ஒன்றை சொல்லியுள்ளார். தென் சீன கடல் விவகாரத்தில், சீனாவின் எல்லை விரிவாக்கத்திற்கு இந்தியா ஒரு போதும் ஆதரவு தராது என பிரதமா் மோடி தெளிவாக தெரிவித்துள்ளார்.
‘வளா்ச்சிக் கொள்கைக்கே இந்தியா ஆதரவளிக்கிறது; எல்லை விரிவாக்கத்துக்கு அல்ல’ என்று பிரதமா் நரேந்திர மோடி புருனே நாட்டில் தெரிவித்தார். தென் சீன கடலின் பெரும் பகுதியை சீனா உரிமை கொண்டாடிவரும் நிலையில், தனது புருனே சுற்றுப் பயணத்தில் சீனாவை மறைமுகமாக விமா்சித்து, பிரதமா் மோடி இவ்வாறு கூறினார்.
மேலும், புருனே சுல்தானுடன் பிரதமா் மோடி நடத்திய விரிவான பேச்சு வார்த்தையில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இருதரப்பு கூட்டுப் பயிற்சிகளின் மூலம் பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சா்வதேச சட்டங்களுக்கு இணங்க சுதந்திரமான கடல்- வான்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu