மகாராஷ்டிராவில் 7 தேசியநெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் நிதின்கட்கரி

மகாராஷ்டிராவில் 7 தேசியநெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் நிதின்கட்கரி
X

மகாராஷ்டிராவின் முக்கிய தொழில் மற்றும் கல்வி மையங்களில் ஒன்றான அவுரங்காபாத் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான மற்றுமொரு நடவடிக்கையாக ரூ 5569 கோடி மதிப்பிலான 7 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தண்ணீர் தட்டுப்பாடு மிக்க அவுரங்காபாத் மாவட்டத்தின் பிரச்சினையை போக்குவதற்காக சாலை திட்டங்கள் மூலம் முயற்சி எடுக்கப்படுவதாக அவர் கூறினார். சாலைகள் கட்டமைக்கப்படும் போது நிறைய குளங்களும் கட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குளங்களை வெட்டும்போது கிடைக்கும் மண் மற்றும் கற்களைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படுவதாக தெரிவித்த அவர், இதனால் இரட்டை பலன்கள் கிடைப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய கட்கரி, அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நிலத்தடி நீர் அளவு அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு குறைந்து வருவதாக கூறினார். மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள குளங்களின் காரணமாக இதுவரையில் 14 லட்சம் கியூபிக் மீட்டர்கள் எனும் அளவுக்கு நீர் திறன் அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!