நிதிஆயோக் மூன்றாவது முறையாக மாற்றி அமைப்பு..!
கோப்பு படம்
நிதி ஆயோக் அமைப்பின் அதிகாரபூா்வ உறுப்பினா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் குழுவில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) சோ்ந்த 15 அமைச்சா்கள் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.
திட்டக் குழுவுக்குப் பதிலாக கடந்த 2015, ஜனவரி 1-ஆம் தேதி நிதி ஆயோக் நிறுவப்பட்டது. இந்த அமைப்புக்கு தலைவராக பிரதமா் மோடி உள்ளார். துணைத் தலைவராக அவரால் நியமிக்கப்பட்ட சுமன் கே.பெரி உள்ளார். மேலும், 4 நிரந்தர உறுப்பினா்கள் உள்ளனா்.
அதேபோல் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கியத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சா்கள் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவா்.
தற்போது மாற்றியமைக்கப்பட்ட நிதி ஆயோக்கின் உறுப்பினா்களாக மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சௌஹான் ஆகிய 4 போ் இடம் பெற்றுள்ளனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா மற்றும் ஹெச்.டி. குமாரசாமி, சிராக் பாஸ்வான் என என்டிஏ கூட்டணியைச் சோ்ந்த 11 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபின் நிதி ஆயோக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் என்.டி.ஏ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் இக்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu