தமிழகத்துக்கு புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை சிறப்பு இயக்குனர் ஆர்.என்.ரவி நியமனம்
தமிழக புதிய கவர்னர் ஆர்.என்.ரவி.
நாகலாந்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தின் அடுத்த ஆளுநராக நேற்று அறிவிக்கப்பட்டார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவியிலிருந்து பேபி ராணி மவுரியா ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தின் கூடுதல் பொறுப்பில் இருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் முழு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு), முன்னாள் துணை ராணுவ தலைமை அதிகாரி, உத்தரகாண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த ஆர்.என்.ரவி ?
தமிழகத்துக்கு ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆர்.என்.ரவி, என்கிற ரவீந்திர நாராயண ரவி, 1976ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. 2012ம் ஆண்டு வரை உளவுத்துறையின் சிறப்பு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி லட்சுமி ரவி, ராகுல் ரவி என்கிற மகனும், ஷெபாலி ரவி மற்றும் ஷாமிகா ரவி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகிக்கு நாகாலாந்தின் கூடுதல் பொறுப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu