/* */

ஊரே கொண்டாடி ஹெலிகாப்டரில் பறந்து வந்த பெண் குழந்தை

ராஜஸ்தானில் அனுமன் பிரஜாபத் என்பவர் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வநத சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

HIGHLIGHTS

ஊரே கொண்டாடி ஹெலிகாப்டரில் பறந்து வந்த பெண் குழந்தை
X

ராஜஸ்தானில் பிறந்த பெண்குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த காட்சி.

குடும்பத்தில் நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் 35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை வரவேற்க குழந்தையையும், தாயையும் ஹெலிகாப்ப்டரில் கூட்டி வந்த அனுமன் பிரஜபத் என்பவரை ஊரே கொண்டாடுகிறது.

ராஜஸ்தான் மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில், நிம்பரி சந்தாவந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமன் பிரஜா பத். இவருக்கும் இவரது மனைவி சுகி தேவிக்கும் கடந்த மாதம் ஒரு பெண்குழந்தை பிறந்தது. இதில் என்ன அதிசயம் என்று கேட்காதீர்கள். குழந்தை ஆஸ்பத்திரியில் பிறந்தவுடன் வீட்டிற்கு செல்ல தயார் ஆனார்கள்.


குழந்தை பெற்ற தாய் சுகி தேவியும், அவரது குழந்தையும் ஹார்சோவ்வால் கிராமத்தில் உள்ள சுகி தேவியின் பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்று கொஞ்ச நாட்கள் மாமியார் வீட்டில் இருக்கச்செய்ய முடிவு செய்தார்,பிரஜாபத்

பின்னர், அவரது குழந்தையையும், மனைவியையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ரூ. 4.5 லட்சம் வாடகையில் தனி ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்தார். நிம்பரி சந்தாவந்த் கிராமத்திலிருந்து அனுமன் பிரஜாபத் அவரது உறவினர்களோடு ஹெலிகாப்டரில் ஹர்சோவ்வால் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்குச் சென்று அவரது செல்ல பெண்குழந்தையும், ஆசை மனைவி சுகி தேவியையும் அழைத்துவந்தார்.

பிரஜா பத் குடும்பத்தில் 35 வருடங்கள் கழித்து முதன் முதலில் பிறந்த குழந்தை என்பதால் ஆர்ப்பாட்ட வரவேற்பளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனுமன் பிரஜாபத்தின் தந்தை மதன்லால் கும்ஹார் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அன்றைய தினம் ஒரே கொண்டாட்டமானது. ஆண்குழந்தைகளை மட்டுமே கொண்டாடும் இந்த இச்சமூகத்தில் பெண்குழந்தையை வரவேற்க தனி ஹெலிகாப்டர் பிடித்து வரவேற்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

Updated On: 24 April 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?