இந்தியாவின் புதிய வியூகம்.. கலக்கத்தில் பாகிஸ்தான்

இந்தியாவின் புதிய வியூகம்.. கலக்கத்தில் பாகிஸ்தான்
X

பைல் படம்

இதுவரை நடந்த போர்களால் பொருளாதாரம் நசிந்து விட்டது. பேச்சு வார்த்தை நடத்தலாம் என பாகிஸ்தான் வேண்டுகோள் வைத்துள்ளது

இதுவரை நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர்களால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக வீழ்ந்து விட்டது. இனியாவது அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்கள் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை, முதலில் நீங்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துங்கள். உங்கள் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் நிரூபித்த பின்னர், பேச்சு வார்த்தை பற்றி யோசிக்கலாம்’ என கடுமையாக பதிலளித்து விட்டது. இந்த பதிலால் மிரண்டு போன பாகிஸ்தானுக்கு இந்தியாவின் அடுத்த நகர்வு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் வடக்கு எல்லையில் ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இப்போது தேஜாஸ் வகை போர் விமானங்களை இந்தியா குவிக்க தொடங்கியுள்ளது. அதற்கு இந்தியா சொன்ன காரணம் தேஜஸ் விமானத்தின் மலைப்பகுதி பயிற்சி நடக்க உள்ளது. அதற்காகத்தான் விமானங்கள் குவிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. அதற்கு எதற்கு இத்தனை விமானங்கள்? என பாக். மிரண்டு போய் கிடக்கிறது.

ஆனால் தற்போது இந்தியா கோப்ரா என்று அதிபயங்கர தாக்கும் படை வீரர்களை அங்கு குவிக்கிறது. காஷ்மீரில் கிட்டத்தட்ட எந்த பிரச்னையும் இல்லாத இந்த நேரத்தில் அதை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலையில் இந்தியா ஏன் இப்படி படைகளை குவிக்கிறது என்று பயந்த பாகிஸ்தான், இந்தியாவின் அடுத்த டார்கெட் கில்கிட்டாகத் தான் இருக்கும். கில்கிட்டை முழுமையாக கைப்பற்றவே இந்தியா படைகளை குவிக்கிறது என்று உறுதியாக நம்புகிறது.

அதனால், பாகிஸ்தான் தன் பெரும்பான்மையான படைகளை கில்கிட்டுக்கு நகர்த்த முயன்றது. அப்படி படைகளை நகர்த்தினால் வடமேற்கு மற்றும் தென்பகுதிகளில் அதன் பாதுகாப்பு குறையும். தாலிபான்களும், பலூச்சிகளும் இதை பயன்படுத்திக்கொண்டு மேற்கிலிருந்து தாக்க தொடங்கி விட்டார்கள். இதனால் பாகிஸ்தான் மீண்டும் படைகளை மீண்டும் தனது பழைய நிலைக்கே கொண்டு சென்று விட்டது. கில்கிட் பகுதிகளையும் விட முடியவில்லை. மற்ற பகுதிகளையும் பாதுகாக்க முடியவில்லை.

ஏற்கனவே நிதி இல்லாத சூழலில், அங்கே வீரர்களின் செலவு மேலும் அதன் நிதி நிலைக்கு சவாலாக, பாகிஸ்தான் பதைபதைக்கிறது. அதே நேரத்தில் சீனா மேற்கில் உதவும் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு, தைவான் பக்கத்தில் அமெரிக்க கப்பல் படை நடமாட்டம் அதிகரிப்பதால், அதை செய்ய முடியவில்லை. பொதுவாகவே இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று உலக நாடுகள் நம்பும் இந்த வேளையில், கண்டிப்பாக அதை செய்யாது என்று நிபுணர்கள் உறுதி தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா தனது மூவ்கள் மூலம், பாகிஸ்தான் படைகளை பல பக்கம் நகர்த்தி, அதிகமாக அவர்களை செலவழிக்க வைக்கிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாக்கிஸ்தான், இந்த கூடுதல் செலவுகள் மூலம் முழுமையாக திவால் நிலைக்கு சென்று விடும். இந்தியா போர் தொடுக்காமல், இப்படி பல்வேறு சிக்கல்களை பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தி, அதன் மூலம் அந்த நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கவே திட்டமிடுகிறது என்று தகவல் தெரிவித் துள்ளனர். எது எப்படியோ இப்போது இந்தியா என்ன செய்கிறது என்பதை ஒட்டு மொத்த உலகமும் கவனிக்கிறது. இதுவே இந்தியாவிற்கு பெருமையான விஷயம் தானே.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!