முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது: லோக்சபாவி்ல் மத்திய அரசு பதில்

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது:  லோக்சபாவி்ல் மத்திய அரசு பதில்
X

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் நுாற்றி நாற்பத்தி இரண்டு அடியாக உள்ளது.

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என லோக்சபாவில் இன்று மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது என, லோக்சபாவில் மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. லோக்சபாவின் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தி, முல்லை பெரியாறு அணை குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என, சபாநாயகருக்கு இடுக்கி எம்.பி., குரியாக்கோஸ் நோட்டீஸ் கொடுத்திருந்தார்.

இந்த நோட்டீசுக்கு இன்று பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் 'நீரியல் ரீதியாக, நில அதிர்வு ரீதியாக, கட்டுமான ரீதியாக, முல்லை பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது' என எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மத்திய அரசின் இந்த திட்டவட்டமான பதிலுக்கு தமிழக விவசாயிகள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இனிமேல் லோக்சபாவில் கேரள எம்.பி.,க்கள் முல்லை பெரியாறு அணை பற்றி தேவையில்லாமல் பேசினால், தமிழக எம்.பி.,க்கள் கடும் பதிலடி தர வேண்டும் எனவும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
ai marketing future